விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மணிமேகலை வீட்டில் நடந்த சோக சம்பவம் – அவரே வெளியிட்ட பதிவு!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மணிமேகலை வீட்டில் நடந்த சோக சம்பவம் - அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மணிமேகலை வீட்டில் நடந்த சோக சம்பவம் – அவரே வெளியிட்ட பதிவு!

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமானவர் விஜே மணிமேகலை. அவருடைய விலை உயர்ந்த பைக் ஒன்று நேற்று திருடு போய் இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஜே மணிமேகலை:

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இரண்டு சீசன்களில் கலக்கி வருபவர் விஜே மணிமேகலை. அவர் சில ஆண்டுகளுக்கு முன் கோரியோகிராஃபரான ஹுசைனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மணிமேகலை மதம் மாறவில்லை. இருவரும் இரு மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பார்த்து பலர் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.

பாக்கியா தவறு செய்யவில்லை என நிரூபித்த எழில், விடுதலை செய்த நீதிமன்றம் – சீரியலில் அடுத்த திருப்பம்!

2019-ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் இருவரும் களமிறங்கினார்கள் அதன் மூலம் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். மேலும் இருவரும் யூடுப் சேனல் நடத்தி வரும் நிலையில் அதில் அவர்களின் சமையல் சார்ந்த வீடியோக்கள் வைரலானது. இந்நிலையில் விஜே மணிமேகலை நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உணவில் விஷத்தை வைத்ததில் வேறொருவரை மாட்டிவிட்ட கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!

அதில் தன்னுடைய விலை உயர்ந்த பைக்கை காணவில்லை என தெரிவித்து இருந்தார். திருமணம் முடிந்த பின் சொந்தமாக உழைத்து வாங்கிய முதல் வண்டி யாரவது பார்த்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் விஜே மணிமேகலை BMW கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது நண்பர் வீட்டில் நிறுத்தப்பட்ட வண்டி காணாமல் போனதால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். மேலும் வண்டியுடன் எடுத்த புகைப்படங்களை அவர் ஷேர் செய்து உதவி கேட்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!