பாக்கியா தவறு செய்யவில்லை என நிரூபித்த எழில், விடுதலை செய்த நீதிமன்றம் – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
பாக்கியா தவறு செய்யவில்லை என நிரூபித்த எழில், விடுதலை செய்த நீதிமன்றம் - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியா தவறு செய்யவில்லை என நிரூபித்த எழில், விடுதலை செய்த நீதிமன்றம் - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியா தவறு செய்யவில்லை என நிரூபித்த எழில், விடுதலை செய்த நீதிமன்றம் – சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை எழில் கண்டுபிடிக்க பாக்கியாவை நீதிமன்றம் விடுதலை செய்கிறது. அதனால் பாக்கியா தன்னுடைய இரு மகன்களை நினைத்து பெருமைப்படும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. அதனால் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டு பாக்கியாவை கைது செய்கின்றனர். பாக்கியா நான் சரியாக தான் சமைத்தேன் என சொல்ல ஆனால் அதை யாரும் நம்பவில்லை. ராதிகா கூட அதை நம்பாமல் இருப்பதால் பாக்கியா அதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் எழில் தன்னுடைய அம்மாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என புறப்படுகிறார்.

மகனுடன் முதன்முறையாக வீட்டிற்கு வந்த நடிகை ஆலியா, உற்சாகத்தில் ஐலா – வைரலாகும் வீடியோ!

எந்த தகவலும் இல்லாமல் இருப்பதால் எழில் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் பாக்கியாவை காப்பாற்ற எழில் அந்த ஆசிரமத்திற்கு வந்து அங்கே பாக்கியா கொடுத்த உணவை எடுத்து சென்று சோதனை செய்கிறார். அப்போது லட்டு கெட்டு போய் இருப்பது தெரிய வருகிறது. எழில் வீட்டிற்கு வந்து செல்வியிடம் நீங்க செய்த லட்டு மட்டும் தான் கெட்டு போய் இருப்பதாக சொல்ல நாங்க லட்டு செய்யவே இல்லை என செல்வி சொல்கிறார்.

சிறையில் இருந்து விடுதலையாகும் துர்கா, அதிர்ச்சியில் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதனால் எழில் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என போலீசிடம் சொல்கிறார். ஆனால் போலீஸ் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்ல பாக்கியாவை கோர்ட்டிற்கு அழைத்து வருகின்றனர். அப்போது கோர்ட்டில் பாக்கியா மீது எந்த குற்றமும் இல்லை என தெரிய வருகிறது. அதனால் பாக்கியாவை விடுதலை செய்ய தன்னுடைய மானத்தை காப்பாற்றிய மகன்களை கட்டியணைத்து நன்றி சொல்கிறார். இது எல்லாம் அடுத்த வார எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here