விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட்!

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு சமையல் நிகழ்ச்சியாக உள்ள குக் வித் கோமாளியின் 3வது புதிய சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

குக் வித் கோமாளி:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடுவர் முதல் போட்டியாளர்கள் வரை அனைவருமே கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள். நன்றாக சமைக்க தெரிந்த குக் உடன் சமையல் தெரியாத கோமாளி சேர்ந்து ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் டாஸ்குகளை செய்து கொண்டே சமையலை முடிக்க வேண்டும். வெற்றிகரமாக 2 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது விரைவில் 3வது சீசன் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள போகும் குக் மற்றும் கோமாளிகளை பற்றிய ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கில் இறைச்சி கடைகள் உட்பட அனைத்தும் மூடல் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

கடந்த 2 சீசன்களாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி, பாலா, புகழ், தங்கதுரை போன்றவர்கள் மக்கள் மனதில் இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழை அடைந்தனர். போட்டியாளர்களாக வந்த வனிதா, ரேகா, கனி, அஸ்வின், சகிலா போன்றவர்கள் வெறும் நடிகர்களாக இதுவரை மக்கள் நினைவில் நின்றதையும் தாண்டி இந்த நிகழ்ச்சி மூலம் அதிகமாக மக்களுடன் நெருங்கியுள்ளனர். அஸ்வின் கிட்டத்தட்ட 10 வருடங்களாக நடிக்க வாய்ப்புகளை தேடி போராடி வந்த நிலையில், குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தற்போது சினிமா வாய்ப்புகளை பெற்றுள்ளார்.

ஜனவரி 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

தற்போது 3வது சீசனில் போட்டியாளர்களாக நடிகை ஊர்வசி, விஜே அர்ச்சனா, நடிகை விஜயலக்ஷ்மி போன்றவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோமாளிகள் ஆக சுனிதா, ஷிவாங்கி, பாலா போன்றவர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், புகழ் கலந்து கொள்ள வாய்ப்புகள் இல்லை என்று பலரும் கூறிவந்தனர். அவர் திரைப்படங்களில் நடிப்பதால் வரமாட்டார் என்று கூறினார்கள். ஆனால் புகழ் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்வார் என்று செஃப் தாமு அவர்கள் உறுதியாக கூறியுள்ளார். இந்த விஷயங்களை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!