விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 அமீருக்கு திருமணம்? அவரே அளித்த பதில்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 அமீருக்கு திருமணம்? அவரே அளித்த பதில்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 அமீருக்கு திருமணம்? அவரே அளித்த பதில்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 அமீருக்கு திருமணம்? அவரே அளித்த பதில்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றிருக்கும் போட்டியாளர் அமீர் தனது டான்ஸ் பள்ளி குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்துள்ள வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அமீர்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக முடிவடைந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல நடன இயக்குனர் அமீர். விஜய் டிவியில் தனது நடன பயணத்தை துவங்கிய அமீர் தற்போது பேர் சொல்லக்கூடிய அளவுக்கு புகழையும், வரவேற்புகளையும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பெற்றிருக்கிறார். அதாவது, கடந்த வாரம் வரை ஒளிபரப்பாகி முடிவடைந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்நுழைந்தவர் அமீர்.

படியில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!

ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த அமீர், காலப்போக்கில் மற்ற அனைத்து போட்டியாளர்களுடனும் சேர்ந்து மக்களை மகிழ்விக்க தொடங்கினார். மேலும் இவர் தனது அம்மா பற்றி பிக் பாஸ் வீட்டில் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து ஆதரவை பெற்றுத் தந்தது. தொடர்ந்து ‘பிக் பாஸ்’ வீட்டில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் உற்சாகமாக கலந்து கொண்டு வந்த அமீர் இந்த சீஸனின் முதல் பைனலிஸ்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘ராஜா ராணி 2’ சித்து & ஸ்ரேயா வீட்டில் அடுத்த கல்யாணம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

தொடர்ந்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் 4வது இடத்தையும் பிடித்து சாதனை நிகழ்த்தி இருந்தார். தற்போது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடித்து அன்றாட பணிக்கு திரும்பி இருக்கும் அமீர் அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இப்போது அமீர் நடத்தும் நடன பள்ளியில் உள்ள குழந்தைகள் பல கேள்விகளை கேட்க, அதற்கு அமீர் கலகலப்பாக பதில் கூறிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், பிக் பாஸ் வீட்டில் தனக்கு ராஜு, பிரியங்கா, பாவனியை பிடிக்கும் என்று கூறிய அமீர், சினிமாவில் நடித்தால் அவருக்கு ஜோடியாக கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அல்லது ஆண்ட்ரியா நடித்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜயை சந்தித்தால் தனக்கு அவரது திரைப்படத்தில் வாய்ப்பு கேட்பேன் என்றும், விஜயை வைத்து ‘போக்கிரி’ திரைப்படத்தின் டோலு டோலு போன்ற ஒரு பாடலுக்கு நடனமாட வைப்பேன் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து திருமணம் குறித்து அமீரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தேசிய விருது பெற்றவுடன் தான் எனக்கு திருமணம் என்று உற்சாகமாக பதிலளித்துள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here