படியில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!

0
படியில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராமமூர்த்தி - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ ரிலீஸ்!
படியில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராமமூர்த்தி - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ ரிலீஸ்!
படியில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை மிரட்டி விட்டு மாடிப்படியில் இறங்கி வரும் ராமமூர்த்தி தவறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. இதுவரை கோபியின் காதல் லீலைகள் எல்லாம் தெரிந்தும் பாக்கியாவிற்காக ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வரும் ராமமூர்த்தி ஒரு முக்கிய முடிவு எடுக்கிறார். அதாவது, கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதை மயூ மூலம் தெரிந்து கொள்ளும் ராமமூர்த்தி தனது மகனின் இந்த இரட்டை வாழ்க்கையை நினைத்து கவலை கொள்கிறார்.

இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைக்கும் ராமமூர்த்தி மயூவிடம் சென்று கோபியை பற்றி கேட்கலாம் என்று திட்டமிடுகிறார். மறுபக்கத்தில், இவர் தான் என் அம்மா திருமணம் செய்து கொள்ளப் போகும் கோபி அங்கிள் என்று மயூ சொன்னால், அதை கேட்கும் ஈஸ்வரிக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று நினைத்து பார்த்து பயப்படுகிறார். பிறகு அந்த முடிவை கைவிடும் ராமூர்த்தி, நேரடியாக கோபியிடம் சென்று பேசுகிறார்.

இதை தொடர்ந்து ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று தற்சமயம் விறுவிறுப்பாக வெளியாகி இருக்கிறது. அதில், கோபியிடம் பேசும் ராமமூர்த்தி, நீ ராதிகாவை திருமணம் செய்யப்போகும் விஷயத்தை மயூ என்னிடமே சொல்லுகிறாள். இதை நான் வீட்டில் உள்ள எல்லாரிடமும் சொல்லப்போகிறேன். இன்று உன் வேஷத்தை நான் கலைக்கிறேன் என்று கோபமாக கூறுகிறார். அதற்கு, போய் சொல்லுங்கள் என்று திமிராக பதிலளிக்கிறார் கோபி.

தமிழகத்தில் நாளை (ஜன.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதை நினைத்து கொண்டு படியில் இறங்கி வரும் ராமமூர்த்தி நிலை தடுமாறி வழுக்கி விழுந்து மயக்கமடைகிறார். உடனே ராமமூர்த்தி விழுந்ததை பார்த்து பதறியடித்து கொண்டு ஓடி வரும் அனைவரும் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இத்துடன் அந்த ப்ரோமோ காட்சிகள் முடிவடைய ராமமூர்த்தி எழுந்திருப்பாரா, கோபி மற்றும் ராதிகாவிற்கு நடக்கப்போகும் திருமணத்தை அவர் தடுப்பாரா என்று ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here