தமிழகத்தில் நாளை (ஜன.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடையை பல்வேறு பகுதிகளில் மின் வாரியம் அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து நாளை (ஜன.27) விருதுநகர் மற்றும் மல்லாங்கிணறு மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்சேவை நிறுத்தம்:
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின்கசிவு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாகவும் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின் வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக நாளை (ஜன.27 ) விருதுநகர் மற்றும் மல்லாங்கிணறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்: விருதுநகர் மின்நிலையத்தில் மின் வினியோகம் பெறும் பகுதிகளான அம்பேத்கர் தெரு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, ராமமூர்த்தி ரோடு,, சத்யமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, ஏ.ஏ.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், ரயில்வே பீடர் ரோடு மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக் கடை பஜார், காந்திபுரம் தெரு, அழகர்சாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரா சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு – மார்ச் 28 முதல் தொடக்கம்!
இதை தொடர்ந்து விருதுநகர் என்.ஜி.ஓ காலனி கிழக்கு, மேற்கு, சத்திரரெட்டியப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மல்லாங்கிணறு துணை மின்நிலையத்தின் சுற்றியுள்ள பகுதிகளான மல்லாங்கிணறு, நாகம்பட்டி, வலையங்குளம், நந்திகுண்டு, மேல துலுக்கன்குளம், கெப்பிலிங்கம்பட்டி, அழகியநல்லூர், வரலொட்டி, வழுக்கலொட்டி, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அப்பகுதி செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி அறிவித்துள்ளார்.