‘ராஜா ராணி 2’ சித்து & ஸ்ரேயா வீட்டில் அடுத்த கல்யாணம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
'ராஜா ராணி 2' சித்து & ஸ்ரேயா வீட்டில் அடுத்த கல்யாணம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
'ராஜா ராணி 2' சித்து & ஸ்ரேயா வீட்டில் அடுத்த கல்யாணம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

‘ராஜா ராணி 2’ சித்து & ஸ்ரேயா வீட்டில் அடுத்த கல்யாணம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்த சித்து மற்றும் ஸ்ரேயாவின் வீட்டில் தற்போது இன்னொரு விசேஷம் நடைபெற்றுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரேயா

கலர்ஸ் தமிழ் டிவியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருந்த ‘திருமணம்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் நடிகர் சித்து மற்றும் நடிகை ஸ்ரேயா. இந்த சீரியல் திருமணத்திற்கு பிறகு காதலிக்க துவங்கும் ஒரு ஜோடியை மையமாக வைத்து காதலும், மோதலும் கலந்து ஒளிபரப்பானது. அந்த வகையில் ‘திருமணம்’ சீரியலில் திருமணத்திற்கு பிறகு காதலிக்க துவங்குவது போல் நடித்து கவனம் ஈர்த்த சந்தோஷ் மற்றும் ஜனனி ஜோடிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவானார்கள்.

இப்படி இருக்க சீரியலில் மக்கள் விரும்பும் தம்பதிகளாக வலம் வந்த நடிகர் சித்து மற்றும் நடிகை ஸ்ரேயா இருவரும் நிஜத்தில் காதலித்து சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அப்படி சித்து, ஸ்ரேயாவின் திருமணத்தில் இவர்கள் இருவரை தவிர அதிக கவனம் ஈர்த்திருந்தவர் நடிகை ஸ்ரேயாவின் தங்கை ப்ரியா தான். அதாவது, சித்து, ஸ்ரேயா திருமணத்தில் மச்சினிச்சியுடன் சித்து செய்த கலாட்டாக்கள் ரசிகர்களிடம் வரவேற்புகளை பெற்றிருந்தது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

இந்நிலையில் நடிகை ஸ்ரேயாவின் தங்கை ப்ரியாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த நிச்சயதார்த்தத்தில் நடிகர் சித்து மற்றும் நடிகை ஸ்ரேயா இருவரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்களுடன் வலைதள பக்கத்தில் நடிகர் சித்து ஷேர் செய்ய அது வைரலாகி வருகிறது. இதனுடன் சித்து, ஸ்ரேயா திருமணத்தை அடுத்து அவர்கள் வீட்டில் நடைபெற்ற இந்த விசேஷ நிகழ்வு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here