Vijay TV Bigg Boss Promo – மீண்டும் போட்டிக்களத்தில் கலகலப்பூட்டிய ‘பிக் பாஸ்’ வீடு!

0
Vijay TV Bigg Boss Promo - மீண்டும் போட்டிக்களத்தில் கலகலப்பூட்டிய 'பிக் பாஸ்' வீடு!
Vijay TV Bigg Boss Promo - மீண்டும் போட்டிக்களத்தில் கலகலப்பூட்டிய 'பிக் பாஸ்' வீடு!
Vijay TV Bigg Boss Promo – மீண்டும் போட்டிக்களத்தில் கலகலப்பூட்டிய ‘பிக் பாஸ்’ வீடு!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது பொங்கல் கொண்டாட்டம் அரங்கேறி கொண்டிருக்கும் வேளையில், சில ஸ்வாரசியமான போட்டிகளும் நடைபெற்றுள்ளது. இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது .

பிக் பாஸ் ப்ரோமோ

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியானது இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. அந்த வகையில் கடந்த 4 சீசன்களாக சூப்பர் ஹிட் அடித்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த ஆண்டு துவங்கி சுமார் 100 நாட்களை கடந்து இன்று வரையும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இம்முறை 18 போட்டியாளர்கள், 2 வைல்ட் கார்டு என்ட்ரி உட்பட 20 போட்டியாளர்களுடன் களம் கண்ட இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் 5 பேர் பைனலுக்கு சென்றுள்ளனர்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ நடிகை வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் மக்களின் பேராதரவை பெற்றிற்கும் போட்டியாளர்கள் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி மற்றும் நிரூப் ஆகியோர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதி மேடையை அலங்கரிக்க உள்ளனர். இப்போது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டு மற்ற போட்டியாளர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நடைபெற்று வரும் கொண்டாட்டத்தில் அனைவரும் சேர்ந்து பொங்கல் வைப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியானது.

TRB முதுகலை பட்டதாரி தேர்வர்கள் கவனத்திற்கு – தகுதித்தேர்வு ஒத்திவைப்பு!

இதையடுத்து ‘பிக் பாஸ்’ வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே ஃபன் கேம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது, கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள மேடையில் பல பரிசு பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களுக்கு ஒரு வலையம் கொடுக்கப்பட்டு, அந்த பரிசுகள் ஒன்றின் மீது வீசி அதில் கிடைக்கும் பரிசை எடுத்து மற்றவர்களுக்கு டெடிகேட் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் போட்டியாளர் ராஜு, தாமரைக்கு ஒரு பரிசை கொடுக்க, வருண் பாவனிக்கு கிப்ட் எடுத்து கொடுப்பது போல வெளியான 2 வது ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!