விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? சீசன் 1 போட்டியாளர் கணித்த தகவல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக் பாஸ் சீசன் 6" நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? சீசன் 1 போட்டியாளர் கணித்த தகவல்!
விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? சீசன் 1 போட்டியாளர் கணித்த தகவல்!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கி தற்போது எட்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் வெற்றி வாய்ப்பை தட்டி செல்ல போகும் போட்டியாளர் இவர் தான் என முதல் சீசனில் சர்ச்சை நாயகியாக இருந்த போட்டியாளர் ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

விஜய் டிவியில் பல மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், அதில் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் மக்களின் எதிர்பார்ப்புகளுடன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதில் புதுமையாக சாமானிய மக்களில் இருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் எனவும் அதற்கான ஆடிசன் நடத்தப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அதன் மூலம் 21 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் 8 பேர் 8 வாரங்களில் வெளியேறி தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களில் யார் அந்த டாப் 5ல் இடம் பிடிக்க இருக்கிறார்கள் என மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக விக்ரமன் இருக்கிறார். அவர் தான் இந்த சீசனில் வெற்றியாளராக வருவார் என சீசன் 1ல் கலந்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சன் டிவி சீரியல் நடிகைகாக கதையில் செய்யப்பட்ட மாற்றம் – வெளியான உறுதி தகவல்!

Exams Daily Mobile App Download

அவருக்கு தான் politically எது சரி என தெரியும் என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். விக்ரமன் என்ன தான் நன்றாக விளையாடி வந்தாலும், மக்கள் மனதில் அசிம் தான் இடம் பிடித்துள்ளார் என்பதால், அவரும் பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னராக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!