மக்கள் வாக்குகளுடன் காப்பாற்றப்பட்ட பிரியங்கா – வெளியான “பிக்பாஸ் சீசன் 5” முதல் ப்ரோமோ!

0
மக்கள் வாக்குகளுடன் காப்பாற்றப்பட்ட பிரியங்கா - வெளியான
மக்கள் வாக்குகளுடன் காப்பாற்றப்பட்ட பிரியங்கா - வெளியான "பிக்பாஸ் சீசன் 5" முதல் ப்ரோமோ!
மக்கள் வாக்குகளுடன் காப்பாற்றப்பட்ட பிரியங்கா – வெளியான “பிக்பாஸ் சீசன் 5” முதல் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவடைந்த நிலையில், இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று நடைபெறும் நிகழ்வுகள் குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்.1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் இரண்டாவது வாரத்தின் தலைவராக தாமரை தேர்வு செய்யப்பட்டார். பின் நாமினேட் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று நாதியா சங் வெளியேற்றப்பட்டார்.

விபத்தில் சிக்கும் ராமமூர்த்தி, கோபி & ராதிகா பற்றி பாக்கியாவிடம் சொல்வாரா? சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!

மூன்றாவது வாரத்தின் தலைவராக சிபி தேர்வு செய்யப்பட்டார். பின் நாமினேட் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகளுடன் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார். பின் நான்காவது வாரத்தின் தலைவராக மது தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நாமினேட் செய்யப்பட்டுள்ளவர்களில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக நேற்றைய எபிசோடில் கமல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை, நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

அதில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என பலருக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஸ்னாக்ஸ் வேண்டும் என ஒருவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கமல் சொல்கிறார் என பிரியங்காவை சொல்ல, பின் பிரியங்கா காப்பாற்றபட்டதாக கமல் அறிவித்தார். அதை கேட்டதும் பிரியங்கா வருத்தப்படுவது போல ரியாக்ஷன் காட்டினார். மேலும் இந்த வாரம் குறைவான வாக்குகளுடன் சின்ன பொண்ணு வீட்டை விட்டு வெளியேறினார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!