தீவிரவாதிகளிடம் இருந்து கண்ணம்மாவை காப்பாற்றும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அப்டேட்!

0
தீவிரவாதிகளிடம் இருந்து கண்ணம்மாவை காப்பாற்றும் பாரதி - 'பாரதி கண்ணம்மா' சீரியல் அப்டேட்!
தீவிரவாதிகளிடம் இருந்து கண்ணம்மாவை காப்பாற்றும் பாரதி - 'பாரதி கண்ணம்மா' சீரியல் அப்டேட்!
தீவிரவாதிகளிடம் இருந்து கண்ணம்மாவை காப்பாற்றும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அப்டேட்!

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வந்த சுவாரஸ்யம் குறைந்து விட்ட காரணத்தால், ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கதை குறித்து புலம்ப ஆரம்பித்து விட்டனர். இதனால் கதைக்களத்தில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு தற்போது புதிய விஷயங்கள் வர உள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல்

லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் ஒரே பள்ளியில் படித்துவரும் நிலையில், லக்ஷ்மிக்கு ஹேமா தான் தனது சகோதரி என்று தெரிந்து விட்டது. பாரதியிடம் தனக்கு தெரிந்ததை லட்சுமி சொல்லி விட்டது போல், ஹேமாவிடமும் சொல்லிவிட வாய்ப்புகள் உள்ளது என்று பயந்து ஹேமாவை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்கு பாரதி முயற்சித்து வந்தார். கண்ணம்மா மற்றும் ஹேமா இருவரும் எவ்வளவோ சொல்லியும் கேட்காத பாரதி, கடைசியில் ஒரு வழியாக டிசியை வாங்கி விட்டார்.

ஆனால் அதன் பிறகு ஹேமா அழுவதை பார்த்து தாங்க முடியாமல் அதை கிழித்து போடுகிறார். இந்த காட்சிகள் நல்ல விதமாக முடிந்த சில நாட்களிலேயே அடுத்த திருப்பத்தை நோக்கி கதை நகர்ந்துள்ளது. அதாவது கண்ணம்மாவும், பாரதியும் வேலை செய்யும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் சாதாரண மனிதர்களை போல் புகுந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள அமைச்சரை தான் குறி வைத்தனர். ஆனால் கண்ணம்மா அவர்களிடம் சிக்கி கொண்டார்.

தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதனை அறிந்து அனைவரும் பயத்தில் உள்ளனர். கண்ணம்மாவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது. அதுமட்டுமில்லாமல், அந்த மருத்துவமனையில் தான் லக்ஷ்மியும் இருக்கிறார். இதனால் சௌந்தர்யா மிகவும் கவலைபடுகிறார். உடனே, இவர்களை காப்பாற்றுவதற்கு பாரதியே களத்தில் இறங்குவது போல் காட்சிகள் வர உள்ளது. இதனால் இனி வரும் வாரங்களில் பாரதி கண்ணம்மா மிகவும் பரபரப்பாக செல்லும் என்பது தெளிவாகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here