விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி குடும்பத்தை விட்டு பிரிந்து ராதிகா உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன ஆகும் என அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் TRPயில் போட்டி போடும் முன்னணி சீரியல் ஆகும். இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு முக்கியமாக இருக்கிறது. மேலும் இல்லத்தரசியின் கதை என தொடங்கப்படும் இந்த சீரியலில் இல்லத்தரசியாக நடிகை சுசித்ரா பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடைய கணவர் கதாபாத்திரத்தில் கோபியாக நடிகர் சதீஸ் நடித்து வருகிறார். மேலும் அவர்களின் மூன்று பிள்ளையாக எழில், செழியன், இனியா கதாபாத்திரத்தில் விஜே விஷால், ஆர்யன், நேஹா மேனன் நடித்து வருகிறார்.

ஜீவாவின் பொறுப்புகளை கவனிக்கும் ஐஸ்வர்யா, தொலைந்து போகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடை பணம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்த சீரியலில் அதிரடி திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. கோபி இந்த அன்பான குடும்பத்தை விட்டு தன்னுடைய காதலியை 40 வயதில் கரம் பிடிக்க இருக்கிறார். தன்னுடைய மூத்த மகனுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் கோபி செய்யும் காரியத்தால் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். மேலும் பாக்கியாவிற்கு கோபி பற்றி எதுவும் தெரியாமல் இந்த குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோபி ராதிகாவின் காதல் எப்போது பாக்கியாவிற்கு தெரிய வரும் என விறுவிறுப்பான எதிர்பார்ப்புடன் தினசரி எபிசோட் செல்கிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்மணி வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக பலர் இருந்தாலும் அவர்களில் அதிகமாக சம்பளம் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா தான் வாங்குகிறார். அவர் ஒரு நாள் எபிசோடிற்கு ரூ. 15000 சம்பளமாக வாங்குகிறார். மேலும் கோபியாக நடிக்கும் சதீஸ் ஒரு நாளைக்கு ரூ. 12000 சம்பளம் வாங்குகிறார். ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா ஒரு நாளுக்கு ரூ. 12000 சம்பளம் வாங்குகிறார். ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா ரூ. 10000 சம்பளம் வாங்குகிறார். செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விகாஷ் ரூ. 10000 சம்பளம் வாங்குகிறார். எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே விஷால் ரூ. 10000 சம்பளம் வாங்குகிறார். இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா மேனனிற்கு ரூ. 8000 சம்பளம் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!