மாலையும் கழுத்துமாக இருக்கும் கோபி ராதிகா, கேள்வி கேட்ட செல்வி.. கேன்சல் ஆகுமா ஆர்டர்? இன்றைய எபிசோட்!

0
மாலையும் கழுத்துமாக இருக்கும் கோபி ராதிகா, கேள்வி கேட்ட செல்வி.. கேன்சல் ஆகுமா ஆர்டர்? இன்றைய எபிசோட்!
மாலையும் கழுத்துமாக இருக்கும் கோபி ராதிகா, கேள்வி கேட்ட செல்வி.. கேன்சல் ஆகுமா ஆர்டர்? இன்றைய எபிசோட்!
மாலையும் கழுத்துமாக இருக்கும் கோபி ராதிகா, கேள்வி கேட்ட செல்வி.. கேன்சல் ஆகுமா ஆர்டர்? இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா மயூராவை பார்த்துவிட, இது என் அம்மாவின் கல்யாணம் என மயூரா சொல்கிறார். பின் செல்வி கல்யாண பொண்ணு, மாப்பிள்ளையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் அவர் கோவத்தில் சத்தம் போட உடனே ராதிகாவின் அம்மா சமையல் ஆர்டரை கேன்சல் செய்ய சொல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா சுடுதண்ணீர் கேட்டு சமைக்கும் இடத்திற்கு செல்ல, அங்கே பாக்கியா இருக்கிறார். பாக்கியா ஆன்டி என்ன இங்கே இருக்கீங்க என கேட்க சமைக்க வந்திருப்பதாக பாக்கியா சொல்கிறார். பின் மயூராவிடம் நீ கல்யாணத்திற்கு வந்தியா என கேட்க, ஆமாம் இது மம்மி கல்யாணம் என மயூரா சொல்கிறார். பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் செல்வி அனைவருக்கும் பந்தி வைத்து கொண்டிருக்க, மேலே இருந்து மணமக்களை பார்க்கிறார். அங்கே கோபி ராதிகா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் மயூரா வாங்க மம்மியை பார்க்கலாம் என கேட்டு வருகிறார்.

அப்போது செல்வியும் வந்து கோபியை காட்ட பாக்கியாவை அழைத்து கொண்டு கீழே கூட்டி செல்கிறார். பாக்கியா அவர்களை அதிர்ச்சியுடன் பார்க்க, கோபியும் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே செல்வி கோபியிடம் உங்களுக்கே இதெல்லாம் அசிங்கமாக இல்லையா என சத்தமாக கேட்க, பாக்கியா பேச வேண்டாம் என தடுக்கிறார். ராதிகாவின் அம்மா இங்கே பிரச்சனை செய்ய வந்து இருக்கீங்களா என கேட்க, செல்வி கோபியை கேள்வி கேட்க சொல்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா கிளம்ப சொல்ல, சந்துரு வந்து சமையல் வேலையை விட்டு விட்டு ஏன் பிரச்சனை செய்கிறீர்கள் என கேட்கிறார்.

பின் கோபி ராதிகா உடன் நெருக்கமாக போட்டோ எடுக்க, செல்வி கோபியை பார்த்து, வீட்டில் கல்யாணம் ஆன பையன் இருக்கான் வயதுக்கு வந்த பெண் இருக்கிறாள் இப்படி வந்து நிற்கிறீர்கள் என கேட்கிறார். பின் ராதிகாவின் அண்ணன் யார் இவங்க என கேட்க, இது கோபியின் பொண்டாடி என சொல்கிறார். உடனே கோபி செல்வி, உனக்கு அவ்வளவு தான் மரியாதை யாரு யாருக்கு பொண்டாடி, விவாகரத்து வாங்கிய இவளா பொண்டாடி, ராதிகா தான் என்னுடைய பொண்டாடி என சொல்ல, ராதிகாவின் அம்மா வெளியே போக சொல்கிறார். பின் மேனஜர் வந்து இவங்க சமைக்க வந்திருக்காங்க உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை இருக்கும் என எங்களுக்கு எப்படி தெரியும் என கேட்கிறார்.

ராதிகாவின் அம்மா செல்வியை வெளியே போக சொல்ல, ஆனால் பாக்கியா செல்வியை அழைத்து கொண்டு மாடிக்கு செல்கிறார். பாக்கியா ராதிகாவிடம் பேசியதை எல்லாம் நினைத்து பார்க்கிறார். எப்படி நல்லவள் போல பேசினால் என பாக்கியா நினைத்து பார்க்கிறார். உடனே ராதிகா என்ன இதெல்லாம் என கேட்டு கோவித்துக் கொண்டு செல்கிறார். மேனேஜர் இனிமேல் சமையலுக்கு வேற ஆட்களை பார்க்க முடியாது என சொல்கிறார். மறுபக்கம் தாத்தா மண்டபம் ஏறி ஏறி இறங்குகிறார். பாக்கியா நடந்ததை நினைத்து வருத்தப்பட, செல்வி கல்யாணத்தை நிறுத்தலாம் என சொல்கிறார். எந்த உரிமையில் கல்யாணத்தை நிறுத்த முடியும் என கேட்க, பாக்கியா செல்வியை வேலை பார்க்க சொல்கிறார்.

அப்டேட்களை அள்ளித்தெளிக்கும் வாட்ஸ் அப் – இனி File sharing மிக சுலபம்!

ஆனால் செல்வி கல்யாணத்தை நிறுத்திவிட்டு போகலாம் என சொல்கிறார். மறுபக்கம் கோபி சந்துருவிடம் என்ன இதெல்லாம் என கேட்க, எனக்கு இதெல்லாம் தெரியாது என சொல்கிறார். கோபி அவள் வேண்டும் என்றே வந்திருப்பதாக சொல்ல, ராதிகா அவங்க தெரியாமல் தான் வந்தது போல சொல்கிறார். ராதிகாவின் அம்மா அவங்களை கிளம்ப சொல்ல சொல்ல, சந்துரு அதில் பிரச்சனை இருப்பதாக சொல்ல, என்ன பிரச்சனை என்றாலும் பரவாயில்லை என கோபி சொல்கிறார். பாக்கியா முதலாளி சொன்னதை நினைத்து பார்க்க, சாம்பார் தீர்ந்துவிட்டதாக ஒரு பெண் வருகிறார். செல்வி இங்கே இருக்கும் நிலைமை தெரியாமல் பேசாதே என சொல்ல, பாக்கியா சாம்பார் கொடுத்துவிட சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!