பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொல்லும் ஜெனி, திருமண ஏற்பாடுகளை பார்த்து சந்தோசப்படும் கோபி – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொல்லும் ஜெனி, திருமண ஏற்பாடுகளை பார்த்து சந்தோசப்படும் கோபி - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொல்லும் ஜெனி, திருமண ஏற்பாடுகளை பார்த்து சந்தோசப்படும் கோபி - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொல்லும் ஜெனி, திருமண ஏற்பாடுகளை பார்த்து சந்தோசப்படும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிடம் ஜெனி நானும் வேலைக்கு சென்று உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என சொல்ல, என்னுடைய வேலையை நீ கவனித்துக்கொள் என பாக்கியா சொல்கிறார். மறுபக்கம் திருமணத்திற்கு சந்துரு பத்திரிகை அடிக்க அதை பார்த்து கோபி சந்தோசப்படுகிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியலட்சுமியிடம் ஜெனி ஆன்டி நான் வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். என்ன திடீரென என பாக்கியா கேட்க, நானும் வேலைக்கு சென்றால் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைப்பதாக ஜெனி சொல்கிறார். அதை கேட்டு பாக்கியாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. பாக்கியா ஜெனியிடம் நீ எனக்காக வேலைக்கு செல்வது சரி தான் ஆனாலும் தனிப்பட்ட முறையில் ஒரு பெண் சொந்த காலில் நிற்க வேண்டும் என சொல்கிறார். பின் ஜெனியிடம் நீ வெளியே தனியாக வேலைக்கு போக வேண்டாம் என்னுடைய வேலையை பார்த்து கொள் சமையல் ஆர்டர் வாங்குவது எல்லாம் நீ பார், சமைக்கும் வேலையை நாங்க பார்த்துக் கொள்கிறோம் என சொல்ல ஜெனி சரி என சொல்கிறார்.

பின் தாத்தா நீங்க எடுத்த முடிவு சரி தான் ஆனால் மண்டபத்தில் சமைப்பது என்பது ஆம்பளைங்க கூட செய்ய கஷ்டப்படும் வேலை, நீ உடம்பை மிகவும் வருத்திக் கொள்வது போல தெரிகிறது என சொல்கிறார். ஆம்பளைங்க வீட்டில் பெண்களுக்கு சமைக்க கஷ்டப்படுகிறார்கள், ஆனால் வேலை என்று வாந்தால் செய்கிறார்கள் என செல்வி சொல்கிறார். உடனே தாத்தா நான் அதற்கு சொல்லவில்லை கஷ்டப்பட வேண்டாம் என சொன்னதாக சொல்ல, உடனே பாக்கியா நான் என்னை சோதனை செய்து பார்க்க தான் இந்த ஆர்டரை எடுத்தேன் என சொல்கிறார். நான் தனிப்பட்ட முறையில் எப்படி சமூகத்தில் இருக்கேன் என தெரிந்து கொள்ள நானே வைத்து கொள்ளும் சோதனை என சொல்கிறார்

ஒரு முறை சரியாக செய்துவிட்டால் அதை வைத்து கொண்டே நான் சென்றுவிடுவேன். முதலில் அடுத்தவர்களை விட நாம நம்மை மதிக்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார். மறுபக்கம் சந்துரு ராதிகா கோபி கல்யாண பத்திரிகையை கொண்டு வந்து காட்டுகிறார். அனைவரும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பின் கோபி வர சந்துரு அவரிடம் பத்திரிகையை காட்டுகிறார். மயூரா இனிமேல் கோபி அங்கிள் என்னுடன் இருப்பார் என சொல்லி சந்தோசப்படுகிறார். கோபி பத்திரிகையை பார்த்துவிட்டு ரொம்ப நன்றாக இருப்பதாக சொல்கிறார். என் மகளின் வாழ்க்கையில் சந்தோசம் இனி எப்படி இருக்க போகிறது என நினைத்தேன் ஆனால் இப்போது சந்தோசமாக இருப்பதாக ராதிகாவின் அம்மா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

மறுபக்கம் பாக்கியா ஆர்டர் பற்றி நினைக்க செல்வி ஜெனி சமைக்க நினைப்பதாக சொல்கிறார். அப்போது சமையல் ஆர்டர் பற்றி பேச மேனேஜர் போன் செய்கிறார். அந்த மினி மண்டபத்தில் அடுத்த வாரம் திருமணம் நடக்க இருக்கிறது நீங்க சமைக்க வேண்டும் என அவர் சொல்ல பாக்கியா சரி என சொல்கிறார். என்ன சமைக்க வேண்டும் என மீண்டும் போன் செய்து சொல்வதாக அவர் சொல்ல பாக்கியா ஜெனியை பார்த்துக் கொள்ள சொல்கிறார். மறுபக்கம் ராதிகா கோபி திருமணத்திற்கு ஜவுளி எடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கோபி ராதிகாவுக்கு கல்யாண புடவை நான் எடுக்குறேன் என சொல்கிறார். எல்லாரும் சேர்ந்து சென்று ட்ரெஸ் எடுக்க வேண்டும் என சொல்ல, கோபி இப்படி எல்லாம் பேசாதீங்க கூச்சமாக இருப்பதாக சொல்கிறார். சந்துரு அப்படி எல்லாம் பேசாதீங்க என சொல்ல மயூரா எனக்கு சிவப்பு கலர் ட்ரெஸ் வேண்டும் என சொல்கிறார். உடனே கோபி அப்படியே இனியாவிற்கு ஒரு ட்ரெஸ் எடுக்க வேண்டும் என சொல்ல அனைவரும் முகம் சுண்டுகின்றனர். கோபி அதை பார்த்து சாரி என சொல்ல, ஆனால் ராதிகா இனியாவிற்கும் எடுக்கலாம் பிரச்சனை இல்லை என சொல்கிறார்.

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு 2022 – அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி உத்தரவு!

மறுபக்கம் பாக்கியாவும் ஜெனியும் ஆர்டர் வாங்க வர, ஜெனி உண்மையாக ஆர்டர் கிடைத்துவிட்டதா என கேட்கிறார். பாக்கியா ஆமாம் ஈஸ்வரி கேட்டரிங் என்றால் சாதாரணமாக இருக்கிறதா என கேட்க, ஐயோ ஆன்டி நான் அப்படி சொல்லவில்லை என ஜெனி சொல்கிறார். மறுபக்கம் ராதிகாவின் அம்மா ராதிகா பேசுவது சரியில்லை என சொல்கிறார். ஏன் இப்படி பேசுறீங்க என ராதிகா கேட்க, கோபி அங்கே பாதி இங்கே பாதி என இருந்தால் உனக்கு தான் பிரச்சனை அவரை உன் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என ராதிகாவின் அம்மா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!