எழிலை வெறுக்கும் அமிர்தா.. ஸ்கூலில் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
எழிலை வெறுக்கும் அமிர்தா.. ஸ்கூலில் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் இனியா - இன்றைய
எழிலை வெறுக்கும் அமிர்தா.. ஸ்கூலில் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தாவிற்கு போன் செய்ய ஆனால் அமிர்தா போனை எடுக்காமல் இருக்கிறார். அதனால் எழில் அதை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் இனியா பெற்றோரை அழைத்து வராமல் கஷ்டப்படுகிறார். பின் ஜெனியின் அம்மா ஜெனியை பார்க்க வீட்டிற்கு வருகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தாவிற்கு போன் செய்ய ஆனால் அருகே அம்மா இருப்பதால் அமிர்தா எழில் போனை எடுக்காமல் இருக்கிறார். எழில் போனை எடுக்காமல் இருப்பதை நினைத்து வருத்தப்பட, பாக்கியா வந்து எழிலை பார்த்து கவலைப்படுகிறார். என்ன ஆச்சு என கேட்க, அமிர்தா பெற்றோர் வீட்டில் இருந்து யாரவது வந்து பேச சொல்கிறார்கள். ஆனால் அது இப்போது நடக்காதே என சொல்ல, பாக்கியா உன் நல்ல மனசிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என சொல்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி இனியா பற்றி கேட்க, பாக்கியா இனியா சாப்பிடவில்லை என சொல்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

பின் பாக்கியா வேன் வந்துவிடும் சீக்கரம் வரமாட்டியா என கேட்க, இனியா எனக்கு உடம்பு சரியில்லை லீவ் போடவா என கேட்கிறார். என்ன செய்கிறது என பாக்கியா கேட்க தலைவலியாக இருப்பதாக இனியா சொல்கிறார். பாக்கியா ஸ்கூலில் எதாவது பிரச்சனையா என கேட்க அதெல்லாம் இல்லை என இனியா சொல்கிறார். பின் பாக்கியா இனியாவை ஒழுங்காக ஸ்கூலிற்கு போ என சொல்ல எழிலை கொண்டு சென்று விட சொல்கிறார். பின் இனியா அண்ணனை பேச சொல்வோம் என நினைக்க ஆனால் இனியா அதெல்லாம் ஒத்துக் கொள்ளமாட்டார்களே என நினைக்கிறார்.

மறுபக்கம் இனியா பெற்றோர்களை கூட்டிக் கொண்டு வராததால் கிளாஸ் வாசலில் நிற்கிறார். அப்போது மற்ற பசங்க எல்லாரும் பெற்றோர்களை அழைத்து வந்து பேசிவிட்டு உள்ளே சென்றுவிடுகின்றனர். இனியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. பின் ஜெனியை பார்க்க அவருடைய அம்மா மரியம் வருகிறார். ஈஸ்வரி ஜெனியை வர சொல்ல, ஜெனயை கூப்பிட்டால் வேகமாக வருவாள் என சொல்கிறார். மரியம் காலையில் தான் பாக்கியா போன் செய்து சொன்னதாக சொல்ல, அப்போது ஜெனி வருகிறாள். மரியம் ஜெனியை பார்த்து சந்தோசப்படுகிறார். ஜெனியை ஒரு வாரம் நான் கூட்டி சென்றுவிட்டு வருகிறேன் என சொல்ல, ஆனால் செழியன் வேண்டாம் என சொல்கிறார்.

பின் இனியாவின் பிரின்சிபால் வந்து ஏன் பெற்றோர்கள் வரவில்லை மாலைக்குள் வர வேண்டும் இல்லை என்றால் நீயே டீசி வாங்கி கொள் என சொல்கிறார். இனியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் அழுகிறார். மறுபக்கம் எழில் அலுவலகத்தில் அமிர்தா வருவாள் என நினைக்க ஆனால் அமிர்தா வரவில்லை. அதனால் எழில் வருத்தமாக இருக்க, சதீஷிடம் அமிர்தா போன் செய்தாலும் எடுக்கவில்லை என சொல்கிறார். அப்போது சதீஸ் போன் செய்து பார்க்க அமிர்தா அலுவலகத்திற்கு வரமாட்டேன் என்பது போல பேசுகிறார். சதீஸ் விவரத்தை சொல்ல, எழில் அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

ஹேமாவை பிரிந்து வாடும் பாரதி.. குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடும் கண்ணம்மா – பாரதி கண்ணம்மா அடுத்த கட்டம்!

அப்போது வர்ஷினி தேடி வரும் என்னை கண்டுகொள்ளாமல் இருக்கீங்க, ஆனால் தேடாமல் இருப்பவரை தேடி செல்கிறீர்கள் என சொல்கிறார். உடனே எழில் அது என்னுடைய தனிப்பட்ட விஷயம், படம் பற்றி பேச வேண்டும் என்றால் பேசுங்க என சொல்கிறார்.பின் வர்ஷினி சதீஸிடம் எழில் என்னை தான் திருமணம் செய்வார் என சொல்ல, அதற்கு வாய்ப்பே இல்லை என சதீஸ் சொல்கிறார். ஆனால் வர்ஷினி நீ பார்க்க தான் போகிறாய் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!