கோபியை நினைத்து வருத்தப்படும் ராமமூர்த்தி, பாக்கியாவிடம் கேள்வி கேட்கும் ராதிகா – இன்றைய எபிசோட்!

0
கோபியை நினைத்து வருத்தப்படும் ராமமூர்த்தி, பாக்கியாவிடம் கேள்வி கேட்கும் ராதிகா - இன்றைய எபிசோட்!
கோபியை நினைத்து வருத்தப்படும் ராமமூர்த்தி, பாக்கியாவிடம் கேள்வி கேட்கும் ராதிகா - இன்றைய எபிசோட்!
கோபியை நினைத்து வருத்தப்படும் ராமமூர்த்தி, பாக்கியாவிடம் கேள்வி கேட்கும் ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவிடம் பேசியதை பார்த்து ராதிகா கோபப்படுகிறார். மறுபக்கம் கோபி திருமணத்தை நினைத்து ராமமூர்த்தி வருத்தமாக இருக்கிறார். பின் ராதிகா பாக்கியாவிடம் சில கேள்விகளை கேட்கிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி வீட்டிற்கு வர ஈஸ்வரி ஜெனி என்ன ஆச்சு என கேட்கிறார். ஆனால் தாத்தா ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு தூங்க வருகிறார். பின் கோபி பாக்கியாவிடம் பேசிவிட்டு வர, ராதிகாவின் அண்ணி அதை ராதிகாவிடம் மாட்டி விடுகிறார். இதெல்லாம் நன்றாக இருக்கிறதா என ராதிகாவின் அண்ணி கேட்கிறார். உடனே ராதிகாவும் கோபப்படுகிறார். கோபி அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லி சமாளிக்கிறார். அந்த இடியட் இங்கே இருப்பது எனக்கு பிடிக்கவில்லை அதனால் தான் நான் பேசினேன் என கோபி ராதிகாவிடம் விளக்கம் கொடுக்கிறார்

பின் ராமமூர்த்தி கோபியை நினைத்து தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார். எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என அவர் நினைக்கிறார். அப்போது ஈஸ்வரி எழுந்து என்ன ஆச்சு தூக்கம் வரவில்லையா என கேட்கிறார், ஆமாம் என தாத்தா சொல்ல, ஈஸ்வரி காய்ச்சல் அடிக்கிறதா என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என ராமமூர்த்தி சொல்ல, மனசு சரி இல்லை என சொல்கிறார். ஈஸ்வரி நீங்க கோபி ராதிகாவை கல்யாணம் செய்து கொள்வானோ என்று தான கவலைப்படுறீங்க அதெல்லாம் நடக்காது என ஆறுதல் சொல்லி தண்ணீ கொடுத்து தூங்க சொல்கிறார்.

ராமமூர்த்தி கல்யாணம் நடக்க கூடாது என நினைக்கிறார். ஈஸ்வரி ராமமூர்த்தியை தூங்க சொல்கிறார். மறுபக்கம் கோபி நடப்பதை எல்லாம் நினைத்து கொண்டிருக்க ராதிகாவும் ஒரு பக்கம் நிம்மதி இல்லாமல் இருக்கிறார். மறுநாள் காலை திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. பாக்கியா காலையில் சமையல் வேலைகளை செய்கிறார். அப்போது மேனேஜர் வந்து எல்லாருக்கும் காபி கொடுக்க சொல்கிறார். அப்போது செல்வி சென்று கோபிக்கு காபி கொடுக்க அவர் வேண்டாம் என சொல்கிறார். பின் ராதிகா ரூமிற்கு சென்று காபி கொடுக்க ராதிகாவும் வேண்டாம் என சொல்கிறார். பின் செல்வி பாட்டு பாடி நக்கல் அடிக்கிறார்.

பின் பாக்கியா வேலையை பார்த்துக் கொண்டிருக்க ராதிகாவை சந்திக்கிறார். ராதிகா பாக்கியாவை பார்த்து நான் நிம்மதியாக இருக்க கூடாது அதன் உங்களுக்கு வேண்டுமா டீச்சர் என கேட்கிறார். பாக்கியா எனக்கு புரியவில்லை என சொல்ல, என் கல்யாணத்தில் நான் நிம்மதியாக இருக்க கூடாது நான் குற்ற உணர்ச்சியில் இருக்க வேண்டுமா என கேட்க, அடுத்தவங்க குடும்பத்தை சிதைத்து எனக்கு பழக்கம் இல்லை என பாக்கியா சொல்கிறார்.பின் ராதிகா யாரையும் நம்ப முடியவில்லை என ராதிகா சொல்ல, ஆமாம் வாழ்க்கையில் யாரை நம்புவது என தெரியாது என சொல்கிறார்.

தமிழக ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை – வெளியான சூப்பர் தகவல்!

ராதிகா கோபி சொன்ன போது நான் நம்பவில்லை என சொல்ல, உங்களுக்கு வேலை இல்லை போல எனக்கு நிறைய வேலை இருப்பதாக சொல்லி கிளம்புகிறார். பின் ராதிகா ரொம்ப புத்திசாலி தான் என சொல்ல, ரொம்ப நன்றி என பாக்கியா சொல்கிறார். என்னை பார்த்தால் நக்கலாக இருக்கிறதா என ராதிகா கேட்க, நான் சட்டப்படி தான் கல்யாணம் செய்கிறேன் என ராதிகா சொல்கிறார். உங்க கல்யாணத்தை பற்றி உங்களுக்கே நம்பிக்கை இல்லை சட்டப்படி தான கல்யாணம் செய்ய போறீங்க அப்பறம் என்ன தைரியமாக இருங்க என பாக்கியா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!