தமிழக ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை – வெளியான சூப்பர் தகவல்!

0
தமிழக ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை - வெளியான சூப்பர் தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை - வெளியான சூப்பர் தகவல்!
தமிழக ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை – வெளியான சூப்பர் தகவல்!

தமிழகத்தில் முகவரி இல்லாமல் சாலை ஓரங்களில் கடை நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்த நிலையில் அது எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர்

தமிழகத்தில் சென்னை போன்ற பெரிய நகரங்களில், சொந்த மாநிலத்தை விட்டு வந்த வெளி மாநில தொழிலாளர்களும், முகவரி இல்லாமல் சாலை ஓரங்களில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலிண்டர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அதனால் அவர்களுக்காக 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஐஓசி உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது முகவர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் சார் பதிவாளர் பணியிடங்கள் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகளிலும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சமீபத்தில் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமையல் சிலிண்டர்கள் முதற்கட்டமாக சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பல்பொருள் அங்காடியில் விற்பனை துவங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

அதன் பின் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீ்ட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் ஏற்கெனவே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சிலிண்டர்கள் கொடுக்க என்ன காரணம் என கேள்வி எழுந்துள்ளது. அதற்கு முகவரி இல்லாமல் இந்த தொழிலாளர்கள் சிலிண்டர் வாங்க சிரமப்படுகின்றனர். மேலும் வெளி மாநில தொழிலாளர்கள் முறையான முகவரி சான்று பெறுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!