
மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்ட பாக்கியா, அடுத்தகட்ட முடிவு என்ன? புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
வீட்டிற்காக செலவு செய்த பணத்தை கொடுத்தால் தான் வீட்டை விட்டு செல்வேன் என கோபி கூற பாக்கியா மீண்டும் பழையபடி அந்த வீட்டிற்கே சென்றுவிடலாமா என யோசிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா ஏற்றுக்கொள்வாரா எனவும், பாக்கியாவின் பேச்சை கேட்டு கோபி வீட்டை விட்டு செல்ல போகிறாரா எனவும் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, ராதிகாவுடன் கோபிக்கு தொடர்பு இருக்கிற விஷயம் பாக்கியாவிற்கு தெரியவந்ததுமே கோபியை விட்டு விலகிவிட வேண்டும் என நினைத்தார். இதனால், குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே பாக்கியாவை தடுத்தும் கூட கேட்காமல் கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார்.
இந்நிலையில், பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கோபி கூற கோபியின் துணிமணிகளை பாக்கியா பேக் செய்துவிட்டு வருகிறார். வீட்டை விட்டு செல்ல வேண்டியது நான் அல்ல. நீங்கள் தான் என குடும்பத்திற்கே ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறார். அதாவது, ஆண்கள் என்ன தவறு செய்தாலும் பெண்கள் தான் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா என பாக்கியா கோபியிடம் எதிர் கேள்வி கேட்கிறார். பாக்கியா சொல்வதை கேட்டு குடும்பமே வாயடைத்து நிற்கின்றனர். கோபியும் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை? வைரலாகும் தகவல்!
பின்னர், கோபி நான் இந்த வீட்டிற்காக நிறைய உழைத்திருக்கிறேன். அதனால், இந்த வீட்டிற்காக நான் செலவு செய்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என கோபி கேட்க பாக்கியாவும் உங்களுக்கு நான் 40 லட்ச ரூபாய் பணத்தை தருகிறேன் என கூறுகிறார். குடும்பமே இரண்டாக பிரிக்கிறதை பார்த்து செழியன், இனியா என அனைவரும் பாக்கியாவை திட்டுகின்றனர். இந்நிலையில், பாக்கியா மீண்டும் பழையபடி அந்த வீட்டிற்கே சென்றுவிடலாமா என யோசிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்