
திருமணத்திற்கு பின்னர் இனியாவை வேண்டாம் என கூறும் ராதிகா, அதிர்ச்சியில் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திருப்பம்!
விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் சீரியல் என்றால் அது, பாக்கியலட்சுமி சீரியல் தான். அந்த வகையில் தற்போது அடுத்த திருப்பமாக ராதிகா மற்றும் கோபி இருவரது திருமணமும் இனிதே நடைபெற்று விடுகிறது. ஆனால், மயூ மட்டும் நம்முடன் இருக்கட்டும் என்று ராதிகா கோபியிடம் கூறி விடுகிறார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியல்
பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது, பாக்கியலட்சுமி சீரியல். யாருமே எதிர்பாராத விதமாக பாக்கியா கோபியை முதன் முறையாக எதிர்த்து தனது கோபத்தினை காட்டி உள்ளார். கோபி செய்தது மிக பெரிய தவறாக இருந்தாலும், குடும்பத்தில் இனியா, செழியன் மற்றும் ஈஸ்வரி பாட்டி அனைவரும் கோபிக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து தான் வருகின்றனர். இது எப்போதும் போலவே எழில், ஜெனிக்கு கோபத்தினை ஏற்படுத்தி வருகிறது. செழியன் ஒரு படி மேலே போய் குடும்பத்தை விட்டு பிரிந்து விடலாம் என்று முடிவு செய்து விடுகிறார். இதற்கு பல எதிர்ப்புகள் குடும்பத்தில் கிளம்பியதால் அமைதியாக இருந்து விடுகிறார்.
இவர் இப்படி என்றால், இனியாவும் முதலில் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்து வந்தார். ஆனால், இனி மொத்த குடும்பத்தையும் தானே பார்த்து கொள்வதாக பாக்கியா கூறியதும் இனியாவிற்கு கோபம் வந்து விடுகிறது. தனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்று கூறி விடுகிறார். பாக்கியாவால் கட்ட முடியவில்லை என்றதும் அவருக்கு கோபம் வந்து விடுகிறது. இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கோபி தனது ஆருயிர் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். ராதிகாவிற்கு கோபியின் திட்டங்கள் சரியாகபட்டாலும் திருமணத்திற்கு சற்று யோசிக்கிறார்.
TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு அரிய வாய்ப்பு – இலவச பயிற்சி வகுப்பு!
இந்த நிலையில் அடுத்த அதிரடி திருப்பம் ஒன்று வரவிருக்கிறது. அது என்னவென்றால் கோபி மற்றும் ராதிகா இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு இனியா மற்றும் மயூ இருவருடன் சேர்ந்து இருக்கலாம் என்று பிளான் செய்து இருக்கின்றனர். ஆனால், திருமணம் செய்து கொண்ட பிறகு ராதிகா மயூ மட்டும் தங்களுடன் இருந்தால் போதும் என்பது போல கோபியிடம் கூறுவது போல இனி வரும் எபிசோட்களில் நடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அதிரடி திருப்பங்களுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்