TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு அரிய வாய்ப்பு – இலவச பயிற்சி வகுப்பு!

1
TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு அரிய வாய்ப்பு - இலவச பயிற்சி வகுப்பு!
TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு அரிய வாய்ப்பு - இலவச பயிற்சி வகுப்பு!
TNUSRB தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு அரிய வாய்ப்பு – இலவச பயிற்சி வகுப்பு!

தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. தற்போது தேர்வுக்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அரசு சார்பாக தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

TNUSRB

தமிழகத்தில் மாநகர ஆயுதப்படை , தமிழ்நாடு சிறப்பு காவல் படை சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் தீயணைப்பாளர் போன்ற இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதனையடுத்து இதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் வாயிலாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த TNUSRB PC வில் நடப்பு ஆண்டு முதல் TNPSC போட்டித் தேர்வை போல தமிழ் மொழித்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 100 வினாக்களில் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் குடிமைப்பணிகள் பயிற்சி மையத் தலைவர் மற்றும் தலைமை செயலாளர் அவர்கள் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் 14,000 பள்ளிகள் தரம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

அதில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வை எழுத உள்ளோர்களுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெற விரும்புவர்கள் இணையத்தில் இருந்து நேரடியாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து செப்டம்பர் 14ம் தேதிக்குள் பயிற்சி மையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044 – 24621475 மற்றும் 24621909 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!