விஜய் டிவி டாப் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

0
விஜய் டிவி டாப் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
விஜய் டிவி டாப் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
விஜய் டிவி டாப் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

விஜய் டிவியில் டாப் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஒருவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஷாக் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

நடிகை திருமணம்:

அந்த காலத்தில் சீரியல் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு வாய்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது மாறி சீரியல் நடிகைகளும் திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் கூட சீரியலில் தொடர்ந்து நடிக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. அவருக்கு தான் தற்போது திருமணம் நடைபெற இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

அவர் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான நிலையில், அதன் பின் சாக்லேட், திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா கதாபாத்திரம் தான். அவருக்கு இந்த மாதமே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எங்க கண்ணே பட்டுடும் போல.. முதல் திருமண நாளை கொண்டாடும் பிரபல சின்னத்திரை ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து!

Exams Daily Mobile App Download

ரித்திகா தொகுப்பாளினி DDக்கு திருமண பத்திரிகை கொடுக்க போகும் போது அங்கே புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார். அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில், நீண்ட நாளுக்கு பின் உங்களை பார்த்ததில் சந்தோசம் என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை ஷேர் செய்த DD, Cute BRIDE என பதிவிட்டு இருக்கிறார். அதன் மூலம் இவருக்கு திருமணம் ஆக இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் அவர் யாரை திருமணம் செய்ய இருக்கிறார் என்பது பெரிய சஸ்பென்சாக இருக்கிறது. இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!