விக்னேஷ் சிவனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா – வெளியான போட்டோ!

0
விக்னேஷ் சிவனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா - வெளியான போட்டோ!
விக்னேஷ் சிவனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா - வெளியான போட்டோ!
விக்னேஷ் சிவனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா – வெளியான போட்டோ!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.

நடிகை நயன்தரா:

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையான நயன்தாரா தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தமிழில் மாயா, அறம், டோரா, நெற்றிக்கண் போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் இது போன்ற படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படுகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

கண்ணம்மாவிடம் கையெடுத்து கெஞ்சும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட்!

இதனால் இவருக்கும் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் நயன்தாராவின் அப்பா உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க கேரளா சென்றார். கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் தந்தையை பார்க்க செல்லும் போது நயன்தாராவுடன், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் உடன் சென்றார். தற்போது அல்போன்ஸ் புத்திரனின் கோல்ட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ளார்.

வைஷாலியுடன் காதல், தீபிகாவுடன் கல்யாணம், காயத்ரியுடன் வாழ்க்கை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இந்த நிலையில் நடிகை நயன்தாரா நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார். நயன்தாரா அம்மாவுடன், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து இருக்கும் இருக்கும் புகைப்படத்தை நடிகை நயன்தாரா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா தன் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தை தொடர்ந்து தற்போது சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!