கண்ணம்மாவிடம் கையெடுத்து கெஞ்சும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட்!

0
கண்ணம்மாவிடம் கையெடுத்து கெஞ்சும் பாரதி - சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட்!
கண்ணம்மாவிடம் கையெடுத்து கெஞ்சும் பாரதி - சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட்!
கண்ணம்மாவிடம் கையெடுத்து கெஞ்சும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்ற உண்மை தெரிந்துள்ளது. இந்நிலையில் தற்போது பாரதியும், கண்ணம்மாவும் கடற்கரை ஓரத்தில் நிற்பது போலவும், பாரதி கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 8 வருடங்களுக்கு பின்னர் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மை தெரியவருகிறது. இது பற்றி கண்ணம்மா கேட்க சௌந்தர்யா எதுவும் சொல்லாமல் சமாளிக்கிறார். மேலும் வெண்பாவிற்கும், பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என்ற உண்மையை அஞ்சலி சொல்கிறார். அதனால் ஹேமா தன்னுடைய குழந்தையாக இருப்பாளா என்ற சந்தேகம் கண்ணம்மாவிற்கு வந்துள்ளது.

வைஷாலியுடன் காதல், தீபிகாவுடன் கல்யாணம், காயத்ரியுடன் வாழ்க்கை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மேலும் ஹேமா பற்றி அனைவரிடமும் கண்ணம்மா கேட்டு வருகிறார். ஏற்கனவே ஹேமா தான் பாரதியின் மகள் என்ற DNA டெஸ்ட் ரிப்போர்ட் வெண்பாவிடம் இருக்கிறது. கண்ணம்மா வெண்பா பின்னாடி சென்று எதையோ கேட்பது போல படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. ஒரு வேளை DNA டெஸ்ட் பற்றி வெண்பாவிடம் கேட்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

சரவணன் வீட்டிற்கு வரும் சந்தியாவின் தோழி அனிதா, பிரிய மனமில்லாமல் இருக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

இப்படி விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதை நகர, தற்போது புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கண்ணாம்மா முன்னாள் பாரதி நிற்க, கண்ணம்மா கோபத்துடன் நிற்கிறார். அவரை பார்த்து பாரதி மன்னிப்பு கேட்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை ஹேமா கண்ணம்மாவின் குழந்தை தான் என தெரிந்து என்னுடன் இருக்கட்டும் என பாரதி கெஞ்சுகிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!