நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் தற்போதைய காதல் ஜோடிகளாக இருந்து வருவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்:
தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக “ஐயா” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா. கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட நயன்தாரா தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர், அவரது மார்க்கெட் சற்று சரிந்தது என்று தான் கூற வேண்டும். இதற்கிடையில் நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்தார். ஆனால், இருவரும் பிரிந்து விட்டனர்.
விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – ‘டூ டூ டூ’ பாடல் வெளியீடு!
பல வருட இடைவெளிக்கு பின்னர் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை தேர்ந்து எடுத்து நடித்தார். இதனால் இவரது மார்க்கெட் மீண்டும் எகிறியது. முன்னணி நடிகர்களுடன் மட்டுமே இவர் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது ‘போடா போடி’ ‘நானும் ரவுடி தான்’ போன்ற திரைப்படங்களில் இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், இருவரது காதல் குறித்து செய்திகளுக்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை.
ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா – TRP ரேட்டிங்!
அந்த வகையில் இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை இன்று நயன்தாராவுடன் கொண்டாடினார். இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு மோதிரம் அணிவித்தது போல இருந்த புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு தங்களது நிச்சய செய்தியினை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.