லேட் நைட் ஷூட்டிங்கின் போது சந்திரமுகி ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – வைரலாகும் வீடியோ!

0
லேட் நைட் ஷூட்டிங்கின் போது சந்திரமுகி ஆன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வைரலாகும் வீடியோ!
லேட் நைட் ஷூட்டிங்கின் போது சந்திரமுகி ஆன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வைரலாகும் வீடியோ!
லேட் நைட் ஷூட்டிங்கின் போது சந்திரமுகி ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தற்போது லேட் நைட் ஷூட்டிங்கின் போது ஷூட்டில் இருக்கும் அனைவரையும் காட்டும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மக்களின் மத்தியில் விரைவில் பிரபலமாகி விடுகின்றனர். ஒரு சீரியல்களில் நடித்துவிட்டே சீரியல் பிரபலங்கள் அனைவரும் திரையுலக பிரபலங்கள் அளவுக்கு ரசிகர் கூட்டங்கள் திரட்டி விடுகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஹேமா.

TN Job “FB  Group” Join Now

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஹேமா பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது பாயும் புலி, ஆறாது சினம், சவர கத்தி, வீர எண், இவர் யாரென்று தெரிகிறதா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அளவுக்கு எந்த திரைப்படமும் ஹேமாவிற்கு ரீச்சை கொடுக்கவில்லை. என்னதான் பிஸியாக இருந்தாலும் சமூக வலை பக்கங்களில் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இவர் Hema’ s dairy என்கிற யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி கொண்டிருக்கிறார். அவ்வப்போது இந்த யூடியூப் பக்கத்தில் ஷூட்டிங்கில் நடக்கும் அரட்டைகள், வெளியூர் பயணம், உணவு என அனைத்தையுமே பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் தான் யூடியூப் பக்கத்தில் ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை சம்பாரித்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின் போது அனைவரையும் காட்டும்படியான ஒரு வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!