முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் – வைரலாகும் வீடியோ!

0
முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் - வைரலாகும் வீடியோ!
முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் - வைரலாகும் வீடியோ!
முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் – வைரலாகும் வீடியோ!

ஆலியாவிற்கு தற்போது இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஆலியா ஐலா பாப்பா மற்றும் அர்ஷுக்கு முதல் தடுப்பூசி போடும் படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலியா:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி அதே சீரியலில் கதாநாயனாக தன்னுடன் இணைந்து நடித்து வந்த சஞ்சீவ் என்பவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டவர் தான் ஆலியா. திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்க இணைந்து கொண்டார்.

TN Job “FB  Group” Join Now

இந்த சீரியலை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2வில் நடிக்க ஒப்பந்தமானார். சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரசவ நாளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ரியா என்கிற புதுமுக நடிகை சந்தியாவாக நடிக்க அறிமுகமானார். தற்போது ஆலியாவிற்கு ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தரிசனத்திற்கு சிறப்பு பேக்கேஜ் அறிமுகம்!

குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜா ராணி தொடரில் மீண்டும் இணையப் போவதில்லை எனவும், ரியா தான் இனிமேல் சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பார் எனவும் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று கூறினார். தற்போது ஆலியா தனது மகனுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஆலியா ஐலா பாப்பா மற்றும் அர்ஷுக்கு முதல் தடுப்பூசி போடும் படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!