‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மாப்பிள்ளை பார்க்க சரக்குடன் செல்லும் வெண்பா – அடுத்த கதைக்களம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மாப்பிள்ளை பார்க்க சரக்குடன் செல்லும் வெண்பா - அடுத்த கதைக்களம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மாப்பிள்ளை பார்க்க சரக்குடன் செல்லும் வெண்பா - அடுத்த கதைக்களம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மாப்பிள்ளை பார்க்க சரக்குடன் செல்லும் வெண்பா – அடுத்த கதைக்களம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது வெண்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய எபிசோடிலும் வெண்பா புது மாப்பிள்ளையை ஓட ஓட விரட்டும் காட்சிகள் இடம்பிடித்து கவனம் பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா

சமீபத்திய எபிசோடுகள் மூலம் ரசிகர்களுக்கு கொஞ்சம் போரடிக்கத் துவங்கி இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தற்போது கதையில் ஸ்வாரசியத்தை கூட்டி இருக்கிறது. இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், தன் அப்பா பாரதி என்ற உண்மையை லட்சுமி கண்டுபிடித்தது கண்ணம்மாவுக்கு தெரிய வர அவர் தனது மகளை நினைத்து பெருமைப்படுகிறார். இதனுடன் லட்சுமிக்கு உண்மை தெரிந்ததும் எதாவது ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்து விட்டது.

Exams Daily Mobile App Download

ஆனால், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒரேயொரு ஸ்வாரசியம் என்னவென்றால் வெண்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் சற்று நகைச்சுவையாக நகர்ந்து வருவது மட்டும் தான். அந்த வகையில் வெண்பாவின் அம்மா ஷர்மிளாவின் வருகையுடன் அவரது வில்லத்தனம் எல்லாம் டம்மி ஆகி நகைச்சுவை பக்கம் திரும்பி இருக்கிறது. இப்போது, சமீபத்திய எபிசோடுகளில் வெண்பா தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை திட்டமிட்டு ஏமாற்றி துரத்தி வருகிறார்.

வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக வரும் புதிய கதாபாத்திரம் யார்? பாரதி கண்ணம்மா புதிய ட்விஸ்ட்!

அந்த வகையில், நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையிடம் தனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் நாடகம் ஆடி அவரை துரத்தி விடுகிறார். இதை தொடர்ந்து ஷர்மிளா வெண்பாவுக்கு அடுத்த மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என வற்புறுத்துகிறார். இது தொடர்பாக வெளியான இன்றைய எபிசோடில், சேலை கட்டி பூ வைத்துக் கொண்டு அடக்கம் ஒடுக்கமாக மாப்பிள்ளை பார்க்க செல்லும் வெண்பா ஆரம்பத்தில் அமைதியான பெண் போல நடந்து கொள்கிறார். பிறகு நாடகத்தை ஆரம்பிக்கும் வெண்பா சரக்கு அடிக்கும் பெண் போல ஒரு சீன் கிரியேட் செய்து அவரையும் துரத்தி விடுவது போல வெளியான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!