Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி..!

0
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி..!
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி..!
Degree முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி..!

06.04.2022 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் இ-சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் (E-District Manager) பணிக்கு என பல்வேறு இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Collector Office (Vellore)
பணியின் பெயர் E-District Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இ-சேவை மையம் காலிப்பணியிடங்கள்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் இ-சேவை மையங்களில் காலியாக உள்ள மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் (E-District Manager) பணிக்கு என பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

E-District Manager கல்வித்தகுதி:

E-District Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் B.E, B.Tech, M.C.A, M.Sc போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

வேலூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.

E-District Manager ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Vellore Collector Office தேர்வு முறை:

E-District Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vellore Collector Office விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 18.04.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
வேலூர் – 9.

Vellore Collector Office Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!