மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிதா, நெட்டிசன்கள் குமுறல் – அவரே கொடுத்த பதிலடி!

0
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிதா, நெட்டிசன்கள் குமுறல் - அவரே கொடுத்த பதிலடி!
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிதா, நெட்டிசன்கள் குமுறல் - அவரே கொடுத்த பதிலடி!
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிதா, நெட்டிசன்கள் குமுறல் – அவரே கொடுத்த பதிலடி!

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகை வனிதா, அதன்பிறகு, ஒரு யூடுயூப் சேனல் ஆரம்பித்து அதில், பல ரெசிபிகளையும் சமைத்து வீடியோவாக பகிர்ந்து வருகிறார். தற்போது ஒரு குறிப்பிட்ட உணவு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில்,அது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை நாயகி வனிதா:

1990 களில் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உடன் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை வனிதா. இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு, பல வருடங்கள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் நடிப்பு துறைக்கு வந்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் மிகவும் மோதல்களான கருத்துக்களையே அனைவர் மீதும் திணித்து வந்தார். இதனால் வனிதா என்றாலே சண்டை தான் பலரின் நினைவிற்கு வரும் அளவிற்கு சண்டையிட்டு வந்தார். இவர் நிகழ்ச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – வெளியான புகைப்படம்!

இருப்பினும், இவர் மூலம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடுவதாக நினைத்த தொலைக்காட்சியின் நிர்வாகம் வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வனிதா பிக்பாஸ் புகழ் மூலம் பல வாய்ப்புகளை பெற்றார். இதனால் சின்னத்திரை மற்றும் சினிமா என்று மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஊரடங்கு நேரத்தில் வனிதா தனியாக ஒரு யூடுயூப் சேனல் ஒன்றை தொடங்கினார். இதில், அழகுக்குறிப்புகள், மேக்கப் வீடியோக்கள் மற்றும் ரெசிபிக்களை செய்து பதிவிட்டு வந்தார். இவரின் சமையல் ரெசிபிக்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கிக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில், நேற்று வனிதா தனது யூடுயூப் சேனலில் பீஃப் பிரியாணி செய்து வீடியோ வெளியிடுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் வனிதா மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார். அதில், இது வெறும் ரெசிபி தான். எனக்கு நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நண்பர்களாக உள்ளனர். தான் 7 வயது முதல் அமெரிக்காவில் வளர்ந்தவர் என்றும், பல நாட்டு உணவுகளும் தனக்கு பழக்கம் தான் என்றும் கூறியுள்ளார். மேலும், நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம் அதை அடுத்தவர் மீது திணிக்க கூடாது என்றும், உங்களுக்கு பீஃப் பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு பிடித்த பொருளை வைத்து சமைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!