அம்மன் வேடம் போட்டு தகாத வார்த்தைகளால் திட்டிய வனிதா – நகுல் பரபரப்பு!

0
அம்மன் வேடம் போட்டு தகாத வார்த்தைகளால் திட்டிய வனிதா - நகுல் பரபரப்பு!
அம்மன் வேடம் போட்டு தகாத வார்த்தைகளால் திட்டிய வனிதா - நகுல் பரபரப்பு!
அம்மன் வேடம் போட்டு தகாத வார்த்தைகளால் திட்டிய வனிதா – நகுல் பரபரப்பு!

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காளி வேடமிட்டு நடனம் ஆடிய வனிதா, அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், அவர் அன்று நடந்து கொண்ட விதம் குறித்து நடுவர்களில் ஒருவரான நகுல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் ஜோடிகள்:

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கென்றே பெயர் போனவர் தான் நடிகை வனிதா. 90’ஸ்களில் சில படங்களில் நடித்த அவர் அதற்கு பின்னர் சினிமாவிற்கு பெரிய கும்பிடு போட்டார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதில் வத்திக்குச்சி வனிதாவாக வலம் வந்த அவரை பாதியிலேயே மக்கள் வெளியேற்றினர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டங்கள் குறைப்பு? அமைச்சர் விளக்கம்!

அதன் பின்னர் மீண்டும் கன்டென்ட் இல்லாமல் அவரை உள்ளே அனுப்பியது விஜய் டிவி. பின்னர் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்ற காரணத்தால் மீண்டும் வெளியேறி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக முன்னேறினார். பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். சினிமாவால் பிரபலமடைந்தது ஒரு பக்கம் இருக்க, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பாரதி கண்ணம்மா வெண்பாவின் கர்ப்பகால வீடியோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

இந்நிலையில் சமீபத்தில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷிற்கு ஜோடியாக களமிறங்கினார். கடந்த வாரம் நடைபெற்ற சுற்றில் காளி போல வேடமணிந்து மாஸ் காட்டினார். ஆனால் அதில் சரியாக நடனம் ஆடவில்லை. இதனால் நடுவர்கள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் பேசவே, அவர்களை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பேசியதும் இவருக்கு கோபத்தை ஏற்படுத்த செட்டிலேயே நடுவர்களுடன் விவாதம் செய்தார். நிகழ்ச்சியை பார்க்கும் போதும், வனிதா கொஞ்சம் ஓவராகவே பேசியது ரசிகர்களுக்கு தெரிந்தது.

DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுக்கும் துர்கா, பாரதி கையில் சிக்குமா? அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இந்த பிரச்சனையின் காரணமாக நிகழ்ச்சியை விட்டே விலகுவதாக அறிவித்து ஷாக் கொடுத்தார். தான் விலகுவதற்கு காரணம் ரம்யா கிருஷ்ணன் என்பதை மறைமுகமாக தெரிவித்திருந்தார் வனிதா. தற்போது இந்த நிகழ்ச்சி நிறைவடைந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் அந்த நடுவர்களில் ஒருவரான நகுல் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் நாங்கள் தன்மையாக தான் எங்களின் கருத்துக்களை கூறினோம். ஆனால் அவர் அம்மன் வேஷம் போட்டு கொண்டு தங்களை அசிங்கமான வார்த்தையால் பேசி திட்டியதாக செட்டில் இருந்தவர்கள் கூறினார்கள். என்னை பேசினால் கூட பரவா இல்லை ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரியவர் அவரை இப்படி பேசலாமா என ஆதங்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!