தங்கையின் வாழ்க்கைக்காக வாணி எடுக்கப்போகும் அதிரடி முடிவு – ‘சிப்பிக்குள் முத்து’ ப்ரோமோ ரிலீஸ்!

0
தங்கையின் வாழ்க்கைக்காக வாணி எடுக்கப்போகும் அதிரடி முடிவு - 'சிப்பிக்குள் முத்து' ப்ரோமோ ரிலீஸ்!
தங்கையின் வாழ்க்கைக்காக வாணி எடுக்கப்போகும் அதிரடி முடிவு - 'சிப்பிக்குள் முத்து' ப்ரோமோ ரிலீஸ்!
தங்கையின் வாழ்க்கைக்காக வாணி எடுக்கப்போகும் அதிரடி முடிவு – ‘சிப்பிக்குள் முத்து’ ப்ரோமோ ரிலீஸ்!

தங்கையின் வாழ்க்கைக்காக வாணி, ஆகாஷை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ள நிலையில் இந்த திருமணம் நிறுத்தப்படுமா, வாணி காப்பாற்றப்படுவாளா என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று தற்சமயம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சிப்பிக்குள் முத்து

தமிழ் சின்னத்திரையில் இதுவரை அம்மா – அப்பா பாசம், கணவன் – மனைவி உறவு, நண்பர்கள், கூட்டு குடும்பம் உள்ளிட்ட உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பான ஏகப்பட்ட சீரியல்களை பார்த்திருப்போம். ஆனால், அக்கா தங்கைகள் உறவை முக்கியப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது விஜய் டிவியின் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல். அந்த வகையில் சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் இப்போது 47 எபிசோடுகளை கடந்து ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. அதாவது, தங்கையின் வாழ்க்கைக்காக வாணி தனது அப்பா மனோகரை எதிர்த்து ஆகாஷை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கிறார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவு!

இந்த திருமணத்தில் துளி கூட விருப்பம் இல்லாத பொன்னி அதை தடுத்து நிறுத்துவதற்கு பிரயாசப்படுகிறார். ஆனால், தங்கையின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வாணி இந்த திருமணம் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்த நிலையில் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில், இப்போது கூட யாரவது வந்து உன் அக்காவின் கல்யாணம் நின்று விட்டது என்று சொன்னால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று பொன்னி தனது தம்பியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் வாணியின் திருமண பத்திரிகையை பார்க்கும் ஒரு பெண், இவனை நல்லவன் என்று நம்பி அவர்கள் ஏமாறப்போகிறார்களே. இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று புறப்படுகிறார். அதே நேரத்தில் வாணியிடம் பேசும் அவரது தோழி இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டால் அந்த கஷ்டம் ஒருத்தியுடன் முடிந்து போகும். ஆனால் இந்த கல்யாணம் நடந்தால் கஷ்டமும், அவமானமும் தலைமுறை தலைமுறைக்கும் வரும் என்று கூறுகிறார். இவர்களின் பேச்சை கேட்டு வாணி தனது திருமணத்தை நிறுத்துவாரா என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here