‘வலிமை’ படத்திற்கு நடிகர் அஜித் குமார் பெற்ற சம்பளம் இவ்வளவா? ஷாக் தகவல்!

0
'வலிமை' படத்திற்கு நடிகர் அஜித் குமார் பெற்ற சம்பளம் இவ்வளவா? ஷாக் தகவல்!
'வலிமை' படத்திற்கு நடிகர் அஜித் குமார் பெற்ற சம்பளம் இவ்வளவா? ஷாக் தகவல்!
‘வலிமை’ படத்திற்கு நடிகர் அஜித் குமார் பெற்ற சம்பளம் இவ்வளவா? ஷாக் தகவல்!

தமிழ் சினிமா திரையுலகில் அதிகபட்சமாக சம்பளம் பெரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் தற்போது நடித்து முடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்திற்காக பெற்றுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஜித் குமார்

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி இருக்கும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். 1990களில் சினிமா நடிகராக அறிமுகமான அஜித் குமார் கிட்டத்தட்ட 60 திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். இவர் தனது சினிமா வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தாலும் தன் பெயரை மட்டும் சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வனிதா, நெட்டிசன்கள் குமுறல் – அவரே கொடுத்த பதிலடி!

ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களால், சிறந்த மனிதராக பார்க்கப்படும் நடிகர் அஜித் குமார், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் தமிழ் கதாநாயகர்களில் ஒருவர் ஆவார். பொதுவாக சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுவது வழக்கம் ஆகும். அதுவே முன்னணி நடிகர், நடிகைகள் என்றால் அவர்கள் ஒரு திரைப்படத்திற்கு கோடிக் கணக்கில் சம்பளம் பெறுவார்கள். அதுவும் கதாநாயகர்களுக்கு பல கோடி ரூபாய் தான் சம்பளமாக கொடுக்கப்படும்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – வெளியான புகைப்படம்!

அந்த வகையில் சம்பள விஷயத்தில் ரஜினி, கமல், விஜய் ஆகிய நடிகர்களை தொடர்ந்து அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர் அஜித் குமார் ஒரு படத்திற்கு ரூ.55 கோடி வரை சம்பளமாக பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்ற அளவில் நடித்து வரும் நடிகர் அஜித் குமார், கடைசியாக நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்திற்காக ரூ.55 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார் என தெரிகிறது. நடிகர் அஜித் குமாரின் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!