நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

0
நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் காலியாக இருக்கும் தீர்ப்பாயங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள டெல்லி உச்ச நீதிமன்றம், அதற்காக 2 வாரம் காலக்கெடு கொடுத்துள்ளது.

நீதிபதிகள் நியமனம்

தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தீர்ப்பாயங்கள், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த காலி இடங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – செப்.30ம் தேதி கடைசி நாள்!

அந்த விசாரணையில், மத்திய அரசு தீர்ப்பாயங்களில் புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என கூறி அதற்கான தேர்வுக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உரிய காலங்களில் தீர்ப்பாயங்கள், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதில் தேக்கநிலை காணப்பட்டு வந்தது. அதனால் இந்த வழக்கு மீண்டுமாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள் குழு, ‘தீர்ப்பாயங்கள் மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதிகள் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான மனுக்கள் இன்னும் கிடப்பில் உள்ளது. மேலும் தீர்ப்பாயங்களின் தலைமை பொறுப்புக்கு நியமனம் செய்ய பரிசீலிக்கப்பட்டுள்ள பெயர்களில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் மத்திய அரசு தேர்வு செய்து மற்றவர்களை காத்திருப்பில் வைத்துள்ளது.

குறிப்பாக 10 தொழில்நுட்ப உறுப்பினர்கள், 9 நீதித்துறையை சேர்ந்தவர்களை தேர்வுக் குழு பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசு அந்த பெயர் பட்டியலில் இருந்து 3 பேரை மட்டும் தேர்வு செய்துள்ளது. எந்த அடிப்படையில் இப்பணிகளுக்கு நியமனம் செய்யபட்டுள்ளது’ என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ‘தீர்ப்பாயங்களில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் தீர்ப்பாயத்தின் நியமத்தை மதிக்காததாக கூறி பல்வேறு நீதிபதிகள், மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

திருப்பூர், பல்லடத்தில் 14 மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

இதை தொடர்ந்து விசாரணையின் இறுதி கட்டமாக, ‘மத்திய அரசின் செயலால் உச்ச நீதிமன்றத்துக்கு நேரம் தான் வீணாகியுள்ளது. தீர்ப்பாயங்களுக்கு தலைமை பொறுப்பை கொடுக்க வேண்டிய பட்டியலின் படி நீதிபதிகளை நிரப்பாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியுள்ளது. அதனால் வரும் 2 வாரங்களுக்குள் நாடு முழுவதும் காலியாக இருக்கும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் அதற்குரிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றமே பிறப்பிக்கும்’ என உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here