தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி – மார்ச் 19 ல் தொடக்கம் …!

0

தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி – மார்ச் 19 ல் தொடக்கம் …!

தமிழகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மார்ச் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன .

திறன் மேம்பாட்டு பயிற்சி :

கிராமப்புற இளைஞர்களுக்காக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், பழுது பார்த்தல் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி மார்ச் 19ஆம் தேதி முதல் 16 நாட்கள் வழங்க உள்ளதாக இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி தினம்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 10-12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது ஐஐடி படித்தவர்களும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைவு – தேர்தல் காரணமா?

இதில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயது 18 முதல் 45 கள் இருக்க வேண்டும். இதற்கு மார்ச் 18 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, கல்வி தகுதிக்கான சான்று, வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், ஜாதி சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து உதவி செயற்பொறியாளர் (வே.போ) அலுவலகம், இயந்திர கலப்பை பணிமனை, எண் 1, டாக்டர் வீதி என்.ஜி.ஓ காலனி, திருநெல்வேலி 627007 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0462-2900766, 6383131868, 7598 478081 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!