UPSC NDA & NA (I) இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஆனது தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்விற்கான (National Defence Academy and Naval Academy) இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC NDA & NA (I) இறுதி கட்ட தேர்வு முடிவுகள் :
இறுதி முடிவில், 519 விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்களின் செயல்திறன் அடிப்படையில் இரண்டு அகாடமிகளில் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று UPSC ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்கள் NDA வின் 149வது படிப்பு மற்றும் 111வது இந்திய நேவல் அகாடமி கோர்ஸ் (Naval Academy Course (INAC)) ஆகியவற்றில் சேர்க்கப்படுவார்கள் எனவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த Courses தொடர்பான கூடுதல் தகவல்கள் joinindianarmy.nic.in, joinindiannavy.gov.in மற்றும் careerindianairforce.cdac.in ஆகிய இணையதளங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். 519 விண்ணப்பதாரர்களின் தகுதிப் பட்டியலைத் தயாரிப்பதில், மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று UPSC தெரிவித்துள்ளது.
RRB NTPC Chennai Level-6 தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!
Exams Daily Mobile App Download
விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தங்களின் முடிவுகளைப் சரிபார்க்கலாம் என்றும், இறுதி முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள் தேர்வர்களின் தனிப்பட்ட மதிப்பெண்கள் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும் எனவும் UPSC தெரிவித்துள்ளது.