UPSC நேர்காணலுக்கான தேதி வெளியீடு 2023 – முழு விவரங்கள் இதோ!

0
UPSC நேர்காணலுக்கான தேதி வெளியீடு 2023 - முழு விவரங்கள் இதோ!
UPSC நேர்காணலுக்கான தேதி வெளியீடு 2023 - முழு விவரங்கள் இதோ!
UPSC நேர்காணலுக்கான தேதி வெளியீடு 2023 – முழு விவரங்கள் இதோ!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது (UPSC) Combined Geo-Scientist 2023 தேர்வுக்கான மூன்றாம் நிலையான நேர்காணல் குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலும், நேர்காணல் நடைபெறும் நாள் குறித்த பட்டியலும் இடம் பெற்றுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

UPSC Geo-Scientist 2023:

UPSC ஆணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் Combined Geo-Scientist தேர்வு மூலம் மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Geologist, Geophysicist, Chemist, Hydrogeology ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தேர்வானது Preliminary Exam, Main Exam, Interview என்னும் மூன்று நிலைகளில் நடைபெறும். இந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான UPSC Combined Geo-Scientist முதன்மை தேர்வானது 24.06.2023 மற்றும் 25.06.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் 23.08.2023 அன்று வெளியிடப்பட்டது.

Central Bank of India-வில் Office Assistant வேலை – ஊதியம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!

தற்போது முதன்மை தேர்வில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான நேர்காணல் குறித்த அறிவிப்பானது 02.11.2023 அன்று https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் ஆனது வருகின்ற நவம்பர் மாதம் 20ம் தேதி அன்று தொடங்கப்பட்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி வரை காலை (9.00 மணி), மதியம் (1.00 மணி) என இரண்டு சுற்றுகளாக நடைபெறவுள்ளது. மேலும் தேர்வர்கள் நேர்காணலுக்கான அழைப்பு கடிதத்தை https://www.upsc.gov.in அல்லது https://www.upsconline.nic.in என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download UPSC Geo-Scientist 2023 Interview Notification PDF
Official Website Link   
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!