UPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது !!

0
UPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது !!
UPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது !!

UPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது !!

இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 4ம் தேதி நடக்க உள்ள யுபிஎஸ்சி தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது’ என்று மத்திய அரசு பணியாளர்களுக்கான தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு பணியாளர்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 6 லட்சம் பேர் எழுத்தவுள்ள இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 72 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தீவிர மழை காரணமாக தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பொதுநல வழக்கிற்கு அப்போது யுபிஎஸ்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதாவது, ‘‘இந்த தேர்வு கடந்த மே மாதம் 31ம் தேதியே நடந்திருக்க வேண்டும். கொரோனா காரணமாகவே அக்டோபர் 4ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இனியும் தாமதம் செய்ய முடியாது.

தேர்வுக்கான அடையாள அட்டையும் எலக்ட்ரானிக் முறையில் விநியோகிக்கப்பட்டு விட்டது. அனைத்து காரணிகளையும் ஆராய்ந்தே, தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என UPSC தரப்பில் வாதிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!