CBSE Exam 2023: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. தேர்வு அட்டவணை குறித்த முழு விவரம் உள்ளே!

0
CBSE Exam 2023: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. தேர்வு அட்டவணை குறித்த முழு விவரம் உள்ளே!
CBSE Exam 2023: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. தேர்வு அட்டவணை குறித்த முழு விவரம் உள்ளே!

CBSE மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் பழைய முறைப்படி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

தேர்வு கால அட்டவணை

CBSE பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக 2021-22 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு அனைத்து துறைகளும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதனால் CBSE மாணவர்களுக்கும் மீண்டும் பழைய முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று CBSE வாரியம் அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, நடப்பு கல்வியாண்டு (2022-2023) முதல் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ‘ஆண்டு இறுதித் தேர்வு’ (Annual Examination) என்ற பழைய முறையில் நடத்தப்படும். மேலும் CBSE வாரியம் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் நடத்த உள்ளதாக முடிவு செய்துள்ளது. விரைவில் இதன் தேர்வு அட்டவணை வெளியிடப்படும். அதை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download
வழிமுறைகள்

1. இதற்கு முதலில் cbse.gov.in என்ற சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. இதன் முகப்புப் பக்கத்தில், ‘முதன்மை இணையதளம்’ தாவலைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது சிபிஎஸ்இ கல்வி இணையதளம் திறக்கப்படும். இதில் CBSE 2023 board exam time table என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. இறுதியாக CBSE வகுப்பு 10 அல்லது 12 ஆம் வகுப்பிற்கான தேதித்தாள் திரையில் தோன்றும்

5. இதனை நீங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!