விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி? வில்லி வெண்பா சொன்ன அப்டேட்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி? வில்லி வெண்பா சொன்ன அப்டேட்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி? வில்லி வெண்பா சொன்ன அப்டேட்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி? வில்லி வெண்பா சொன்ன அப்டேட்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் DNA டெஸ்டை, பாரதி எப்போது எடுப்பார் என்று வில்லி வெண்பா அதாவது நடிகை பரினாவிடம் கேள்வி கேட்க அதற்கு அவர் அளித்துள்ள பதில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் பல்வேறு ஸ்வாரசியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது, பாரதி தான் லட்சுமியின் அப்பா என்கிற உண்மையை அனைவரிடமும் சொல்ல இருக்கிறார் கண்ணம்மா. இதற்கு முன்னதாக 8 வருடங்களுக்கு பின்பு என்று ஆரம்பித்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களத்தில் கண்ணம்மாவுக்கு 2 குழந்தைகள் பிறந்தது, அந்த 2வது குழந்தை ஹேமா என்ற விஷயம், லட்சுமிக்கு தனது அப்பா யார் என்கிற சில முக்கியமான உண்மைகள் மறைக்கப்பட்டு வந்தது.

IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஏலத்தில் டாப் 4 வீரர்கள்!

தொடர்ந்து, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகளில் இதில் இருக்கும் ஒவ்வொரு ரகசியமும் அவிழ்ந்து வர இப்போது கண்ணம்மாவுக்கு ஹேமா பற்றிய உண்மை தெரிந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்து வர இருக்கும் எபிசோடில் லட்சுமிக்கு, பாரதி தான் தன்னுடைய அப்பா என்ற உண்மை தெரியவரப் போகிறது. ஆனால் நீண்ட நாட்களாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இது எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் ஒரு முக்கியமான உண்மை என்றால் அது DNA டெஸ்ட் தான்.

அந்த வகையில் ஒவ்வொரு முறையும் DNA டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கண்ணம்மா, பாரதியை வற்புறுத்த டெஸ்ட் எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வருகிறார் பாரதி. ஆனால் இந்த சீரியலில் DNA டெஸ்ட் மட்டும் எடுத்துவிட்டால் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே இருக்கும் எல்லா பிரச்சனைகளும் சரியாகி விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி எப்போது DNA டெஸ்ட் எடுப்பார் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அந்த சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

IPL 2022 புதிய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா – பெருமையாக உள்ளதாக பேட்டி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அதாவது, நடிகை பரினா தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது ஒரு கேள்வி – பதில் பகுதியை நடத்தி வருகிறார். அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பற்றி, அவரது சொந்த விஷயங்கள் பற்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் பரினாவிடம், பாரதி எப்போது DNA டெஸ்ட் எடுப்பார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு ‘வெண்பா விட மாட்டாள்’ என்று வில்லி தோரணையில் பதில் சொல்லி இருக்கிறார் அவர். இந்த பதிவு தற்போது ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!