EPFO வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் வட்டி பணம் – வெளியான மகிழ்ச்சி தகவல்!

0
EPFO வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் வட்டி பணம் - வெளியான மகிழ்ச்சி தகவல்!
EPFO வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் வட்டி பணம் - வெளியானEPFO வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் வட்டி பணம் - வெளியான மகிழ்ச்சி தகவல்! மகிழ்ச்சி தகவல்!
EPFO வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் வட்டி பணம் – வெளியான மகிழ்ச்சி தகவல்!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் கீழ் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் படி பிஎஃப் உறுப்பினர்களுக்கு 8.1 சதவீத வட்டி பணத்தை அரசு டெபாசிட் செய்துள்ளது.

EPFO புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் வருங்கால வைப்பு நிதியின் கீழ் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிஎஃப் சேமிப்புக்கான வட்டி தொகை அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும். அந்த வகையில் பிஎஃப் உறுப்பினர்களுக்கு 8.1 சதவீத வட்டிப் பணத்தை அரசு டெபாசிட் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள். இந்த தொகையானது பிஎஃப் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

எடுத்துக்காட்டாக உங்களது பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் சேமிப்புப் பணம் இருந்தால் அதற்கு வட்டியாக ரூ.80,000 கிடைக்கும். இந்த பணம் பிஎஃப் கணக்கில் வந்துவிட்டதா என தெரிந்து கொள்ள நிறைய வழிகள் இருக்கிறது. அதன் படி மிஸ்டு கால் அல்லது SMS மூலமாக பேலன்ஸ் பார்க்கலாம் அல்லது பிஎஃப் வெப்சைட்டிலும் இது குறித்த விவரங்களை பார்க்கலாம். PF கணக்கு பேலன்ஸ் எப்படி பார்ப்பது என்பது குறித்த முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எளிய வழிமுறைகள்:

  • வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.epfindia.gov.in என்பதை திறக்க வேண்டும்.
  • அதில் For Employees என்ற பிரிவின் கீழ் For Employees என்ற சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் Services என்ற வசதியில் Member Passbook என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிஎஃப் எண் மற்றும் பாஸ்வேர்டு மூலமாக நீங்கள் உங்களது பிஎஃப் பேலன்ஸ் தொகை காட்டப்படும்
  • மொபைல் எண் மூலமாக தெரிந்து கொள்ள, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலமாக 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

  • இந்த வசதி தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடா, மலையாளம், தெலுங்கு, பெங்காலி ஆகிய 10 மொழிகளில் கிடைக்கிறது.
  • மேலே குறிப்பிட்ட எண்ணிற்கு EPFOHO UAN LAN என்று SMS அனுப்ப வேண்டும். இதில் LAN என்பது நாம் தேர்ந்தெடுக்கும் மொழியின் முதல் மூன்று எழுத்துகள் ஆகும். உதாரணமாக, தமிழில் பெற வேண்டுமென்றால், EPFOHO UAN TAM என்று அனுப்ப வேண்டும்.
  • SMS அனுப்பியதும் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு பிஎஃப் பேலன்ஸ், கடைசி டெபாசிட் தொகை உள்ளிட்ட விவரங்கள் வரும் அல்லது 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இந்த சேவையை பெற கட்டணம் எதுவும் இல்லை .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!