WhatApp செயலியில் வரவிருக்கும் Avatar Dp – முக்கிய அப்டேட் வெளியீடு!

0
WhatApp செயலியில் வரவிருக்கும் Avatar Dp - முக்கிய அப்டேட் வெளியீடு!
WhatApp செயலியில் வரவிருக்கும் Avatar Dp - முக்கிய அப்டேட் வெளியீடு!
WhatApp செயலியில் வரவிருக்கும் Avatar Dp – முக்கிய அப்டேட் வெளியீடு!

வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது பல புதிய அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இந்நிலையில், Snap chat போல அவதார் போன்ற புதிய அப்டேட்களை வாட்ஸ்ஆப் வெளியிட இருக்கிறது.

வாட்ஸ்ஆப்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது பலவிதமான புதிய அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. மற்ற செயலியை காட்டிலும் வாட்ஸ்ஆப் செயலியில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதால் பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருக்கிறது.

அதாவது வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறினால் யார் வெளியேறியது என்பது தெரியாத வண்ணம் ஒரு அப்டேட்டை வாட்ஸ்ஆப் வழங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதற்குரிய அப்டேட்டையும் வாட்ஸ்ஆப் கூடிய விரைவில் வழங்க இருக்கிறது. மற்ற செயலிகளில் உள்ள அனைத்து வசதிகளும் வாட்ஸ்ஆப் செயலியில் கொண்டுவரப்படுகிறது. தற்போது ஒரு அருமையான அப்டேட் ஒன்றை வாட்ஸ்ஆப் அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் இனி ‘இந்த’ சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் – UIDAI அதிரடி!

Exams Daily Mobile App Download

அதாவது, snap chat போலவே அவதார் முறையில் DP வைப்பதற்கான அப்டேட்டை வாட்ஸ்ஆப் வெளியிட இருக்கிறது. அதாவது, உங்களுக்கு தேவையான முகம், கண், காது, மூக்கு, முடியின் நிறம் என அனைத்தையும் நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். மேலும், இதில் முதற்கட்டமாக சிரித்த எமோஜி, ஆனந்தக் கண்ணீருடன் எமோஜி, திறந்த வாய், அழும் எமோஜி, கூப்பிய கைகள், கைதட்டல் கைகள், நூறு புள்ளிகள் என 8 எமோஜிகளை முதற்கட்டமாக வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த இருக்கிறது. கூடிய விரைவில் இந்த அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!