தேசிய நெடுஞ்சாலைகளில் மின் தகடு மூலம் மின்சக்தி – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

0
தேசிய நெடுஞ்சாலைகளில் மின் தகடு மூலம் மின்சக்தி - மத்திய அமைச்சர் அறிவிப்பு!
தேசிய நெடுஞ்சாலைகளில் மின் தகடு மூலம் மின்சக்தி - மத்திய அமைச்சர் அறிவிப்பு!
தேசிய நெடுஞ்சாலைகளில் மின் தகடு மூலம் மின்சக்தி – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பதித்து அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பல துறைகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மின்சார உற்பத்தி:

தற்போது அனைத்து துறை படைப்புகளுக்கும் மாற்று வழி கண்டறிந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் நாடு தேவையான அளவு தன்னிறைவு அடைந்து கொள்ள முடியும். தற்போது நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்து வருவதை அடுத்து அதற்கு மாற்று வழியாக மின்சக்தி மூலம் இயங்கும் வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டு சமீப காலங்களில் அதிக உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2018ம் ஆண்டில் 124 ஆக இருந்த, மின்சார வாகனங்களின் பதிவு, தற்போது 1356 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,997 பேருக்கு கொரோனா உறுதி; 33 பேர் பலி – அரசு தகவல் வெளியீடு!

மேலும், சரக்கு போக்குவரத்துக்கான மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டில் 6246 ஆக இருந்து, தற்போது 27,645 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கடந்த சில நாட்களாக அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மக்களவை கூட்டம் நடந்து வருகிறது. அதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவையில் எழுந்த கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் தெரிவித்த பதிலில், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களில், டோல் பிளாசாக்களின் மேற் கூரைகள் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை, போக்குவரத்து, நெடுஞ்சாலை சேவைகளுக்கு பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பொதுத்துறை நிறுவனமான இஇஎஸ்எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நாக்பூர் பைபாஸ், சோலாப்பூர் யெட்ல்ஷி ஆகிய இடங்களில் டோல் பிளாசாக்களின் கூரைகள், சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வைகங்கா பாலம் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!