உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர தடை – ஒன்றிய அரசு கைவிரிப்பு!

0
உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர தடை - ஒன்றிய அரசு கைவிரிப்பு!
உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர தடை – ஒன்றிய அரசு கைவிரிப்பு!

உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர்கள் அங்கு நிலவிய போர் காரணமாக தங்களின் மருத்துவ படிப்பை தொடர் முடியாமல் உள்ளனர். அதனால் தங்களின் மருத்துவ படிப்பை இந்தியாவில் தொடர வேண்டுமென மாணவர்கள் அனைவரும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு தகவல்

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர இருப்பதால் இதனை எதிர்த்து ரஷ்யா அந்நாட்டின் மீது போர் செய்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டு மக்கள் பல நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும் இங்கு இந்திய மக்களை பாதுகாப்பான முறையில் மீண்டும் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உக்ரைனில் இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து கல்வி கற்று வந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு உக்ரைனில் பயின்ற மாணவர்கள் வந்துள்ளதால் இவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு திட்ட கணக்குத்தாரர்களுக்கு ஜாக்பாட் – அக்டோபர் முதல் வட்டி விகிதம் உயர்வு!

அதன்படி உக்ரைனில் இருந்து 14 ஆயிரம் மாணவர்கள் தங்களின் படிப்பை தொடர முடியாமல் உள்ளன. அதனால் இவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக மாநில அரசுகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளதாவது, உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்களிலிருந்தும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர்வது குறித்து எந்தவொரு விதிகளும் கூறப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களால் அதிக கட்டணத்தையும் செலுத்த முடியாது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!