உக்ரைன், ரஷ்யா போரில் இந்திய பிரதமர் மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும் – உக்ரைன் தூதர் கோரிக்கை!

0
உக்ரைன், ரஷ்யா போரில் இந்திய பிரதமர் மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும் - உக்ரைன் தூதர் கோரிக்கை!
உக்ரைன், ரஷ்யா போரில் இந்திய பிரதமர் மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும் - உக்ரைன் தூதர் கோரிக்கை!
உக்ரைன், ரஷ்யா போரில் இந்திய பிரதமர் மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும் – உக்ரைன் தூதர் கோரிக்கை!

தற்போது உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் தாக்குதல் எல்லை மீறியுள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் பேச வேண்டும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகார் பொலிகா கோரிக்கை வைத்துள்ளார்.

தூதர் கோரிக்கை:

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் கடந்த வாரம் முதல் பிரச்சனை வெடித்துள்ளது. முதலில் சாதாரண பிரச்சனையாக உருவெடுத்த பிரச்சனையில் ரஷ்யா முதல் கட்டமாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை எல்லை பகுதியில் குவித்தது. அதன்பின்னார் தற்போது அதிநவீன போர் கருவிகளையும், குண்டுகளையும் வைத்து உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகின்றது. ரஷ்யா படைகள் ராணுவ தளங்களை மட்டுமே தாக்குதல் நடத்துவதாக ஊடகங்களில் தெரிவித்து வந்தது.

TN TRB 9000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

ஆனால் உக்ரைன் நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் ரஷ்யா கூறி வருவது பொய் என்றும், மக்கள் குடியிருப்புகளில் தான் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனை மூன்று திசைகளில் இருந்து சுற்றிவளைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. கருங்கடல் பகுதியில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு வருகின்றது.இந்நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகார் பொலிகா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மார்ச் 15 முதல் மதிய உணவு திட்டம் துவக்கம்!

அதில், ரஷ்யா உடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. உக்ரைனில் நிலவும் தற்போதைய சூழலை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை தொடர்பு கொள்ள வேண்டும். தற்போதைய அசாதாரணமான சூழலுக்கு ஆக்கிரமிப்பு பிரச்னையே பிரதானமாக உள்ளது. உலகில் சக்தி வாய்ந்த, மரியாதைக்குரிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ரஷ்யாவுடன் சிறப்பான உறவை கொண்டுள்ளார். நரேந்திர மோடி கூறினால் நிச்சயம் புதிர் கேட்பார். இந்திய அரசின் சாதகமான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!