TN TRB 9000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
TN TRB 9000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
TN TRB 9000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
TN TRB 9000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் பணியின் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம், 2022ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வுகால திட்ட அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இந்த அட்டவணை போட்டித்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்

தேர்வுகால திட்ட அட்டவணை வெளியீடு:

தமிழகத்தில் COVID-19 மூன்றாவது தாக்கம் குறைந்த நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் அரசால் ஒத்திவைக்கப்பட்டு இருந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் நடப்பு ஆண்டில் 9494 பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வுக்கால திட்ட அட்டவணையை TN TRB வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு 9494 ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மார்ச் 15 முதல் மதிய உணவு திட்டம் துவக்கம்!

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 – தேர்வு ஏப்ரல் 2 வது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் 2022 ஜூன் 2வது வாரத்தில், 3902 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என 4989 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும். இதனை தொடர்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 167 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஜூன் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும்.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் 2 வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்படும். இந்த வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 2 வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும். பொறியியல் கல்லூரிகளில் 104 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!