TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

TNPSC, குரூப் 1 பணிகளுக்கு, இரண்டாம் கட்ட தேர்வு வரும் 4ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

‘ஹால் டிக்கெட்’ வெளியீடு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடங்களில் போட்டி தேர்வுகள் நடத்தப்படவில்லை. சமீபத்தில் குரூப் 1 பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டது. இந்த தேர்வு மூலம் 69 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த குரூப் 1 தேர்வின், முதல் கட்ட தேர்வானது கடந்த 03.01.2021 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,இரண்டாம் கட்ட தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் மீண்டும் கொரோனா நோய் பரவல் காரணமாக இரண்டாம் கட்ட தேர்வு (Mains Exam) நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா தடுப்பு விதிமுறைகள் மூலம் நோய் தொற்று குறைந்து வருவதால் தற்போது இரண்டாம் கட்ட தேர்வு (Mains Exam) நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி!

இந்த இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Mains தேர்வுக்கு நுழைவுச்சீட்டு விரைவில் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட்டுகளை, www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என TNPSC அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here