‘இதை’ அப்டேட் செய்யாவிட்டால் ஆதார் கார்டு செல்லாது – UIDAI அறிவிப்பு!
குழந்தைகள் பிறந்து 9வது மாதம் முதல் பால் ஆதார் கார்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு பயோமெட்ரிக் விபரங்களை இணைக்காவிட்டால் ஆதார் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் ஆதார்:
இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக இருந்து வருவகிறது ஆதார் கார்டு. ஆதார் அட்டையானது தற்போது பான் கார்டு முதல் மொபைல் எண் வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் முக்கியமாக உள்ளது. ஆதார் அட்டையில் மக்கள் தேவைப்படும் பொழுது திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதில் மொபைல் எண் மாற்றுதல் மற்றும் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை அப்டேட் செய்வதும் அடங்கும்.
நடிகர் ஆர்யா, ஜெர்மனி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் புதிய திருப்பம் – நிஜ குற்றவாளிகள் கைது!
அதே போல் குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு எடுக்கப்படும் கார்டிற்கு ‘பால் ஆதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு 9 மாதம் முதல் ஆதார் பெறலாம். இவ்வாறு எடுக்கப்படும் பால் ஆதாரில் கைரேகை மற்றும் கருவிழி போன்றவை இணைக்கப்பட்டிருக்காது. பால் ஆதார் அட்டை எடுப்பதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரசீது இருந்தால் போதுமானது.
TN Job “FB
Group” Join Now
அதனுடன் குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் ஆதார் இணைக்கப்படும். ஆதார் கார்டில் பல்வேறு விதிமுறைகளையும் அப்டேட்களையும் ஆதார் அமைப்பு அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் பால் ஆதாரில் 5 வயது பூர்த்தியானதும் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படாத பால் ஆதார் அட்டையானது செல்லுபடியாகாது செயலிழந்துவிடும் என UIDAI சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.