நடிகர் ஆர்யா, ஜெர்மனி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் புதிய திருப்பம் – நிஜ குற்றவாளிகள் கைது!

0
நடிகர் ஆர்யா, ஜெர்மனி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் புதிய திருப்பம் - நிஜ குற்றவாளிகள் கைது!
நடிகர் ஆர்யா, ஜெர்மனி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் புதிய திருப்பம் - நிஜ குற்றவாளிகள் கைது!
நடிகர் ஆர்யா, ஜெர்மனி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் புதிய திருப்பம் – நிஜ குற்றவாளிகள் கைது!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, ஜெர்மனி பெண்ணிடம் பண மோசடி செய்துள்ளதாக விசாரணையில் உள்ள வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுகு றித்து ஆர்யா நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

ஆர்யா வழக்கு:

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் ஆர்யா அதன் பின்னர் மார்க்கெட் இல்லாமல் தவித்து வந்தார். தற்போது சார்பட்டா பரம்பரை மூலமாக தனது மார்க்கெட்டை மீண்டும் நிலைநாட்டி உள்ளார். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா, ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஆர்யா தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய உள்ளதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணத்தை ஏமாற்றி உள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 55 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் உறுதி!

அதில், நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்தும், கொரோனாவில் பண கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னிடம் 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாக பெற்று ஏமாற்றியதாக குறிப்பிட்டுந்தார். இந்த வழக்கு சென்னை குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையின் போது ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு மற்றும் மெசேஜ் உள்ளிட்ட ஆதாரங்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் நடிகர் ஆர்யாவும் கடந்த 10 ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அதன் பின்னர் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஜெர்மன் பெண்ணுடன் எந்த மெசேஜ் ,செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என தெரிந்தது. இந்த வழக்கிற்கும் ஆர்யாவிற்கும் சம்மந்தம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்ததில் சமூக வலைதளம் மற்றும் பண பரிவர்த்தனை செய்த வங்கி கணக்கு ஆகியவற்றை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடிகர் ஆர்யா பெயரில் போலி கணக்கு உருவாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், வலைதள ஐபி முகவரியை வைத்து, ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது அர்மான் ஆர்யாவின் தீவிர ரசிகர் எனவும், ஆர்யாவின் புகைப்படத்தை வைத்து முகநூலில் கணக்கு ஒன்று தொடங்கி அதன் மூலமாக பல இளம்பெண்களை ஏமாற்றி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஜெர்மனி பெண் விட்ஜாவிடம் அவர்கள் ஆர்யா போல பேசி செல்போன் எண்ணை பெற்றுள்ளார். அதன் பின்னர் ஆர்யா போல குரலை மாற்றி பேசி காதல் வலையில் வீழ்த்தியுள்ளனர். திருமணம் செய்துகொள்ள அவர் ஒப்புதல் தெரிவித்தவுடன் ஆர்யாவின் தாயார் பேசுவது போல் முகமது அர்மான் ஆப் மூலமாக குரலை மாற்றி பேசும் செல்போன் செயலி மூலமாக பேசி உள்ளார். அதை நம்பிய அந்த பெண் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார். அந்த பெண்ணிடமிருந்து 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் ஜெர்மனி பெண் முகமது ஹூசைனி வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியதும் தெரிய வந்தது. ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியவுடன் குற்றத்தை உணர்ந்த இந்த கும்பல் காவல் நிலையத்தில் சரணடைய வந்ததாகவும், ஆனால், அப்போது புகார் ஏதும் வராததால் கைது செய்யாமல் அனுப்பி விட்டதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் கைதான 2 பேரையும் ஆஜர்படுத்தியதை அடுத்து வருகிற 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நடிகர் ஆர்யா இந்த வழக்கு குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்று பகிர்ந்துள்ளார். அதில், உண்மையான குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ததற்காக போலீஸ் கமிஷனர், சைபர் கிரைம் கூடுதல் ஆணையர் மற்றும் சைபர் கிரைம் டீம் ஆகியோருக்கு நன்றி. இந்த மோசடி எதிர்பார்க்காத மன அதிர்ச்சியை தந்தது. என்னை நம்பிய அனைத்து நபர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!