ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

0
ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது
ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது

ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்னும் ஆதார் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Deputy Director General பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Deputy Director General
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில் Deputy Director General பணிக்கு என மொத்தமாக ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Aadhaar தகுதிகள்:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் Computer Science / Information Technology / Electronics பாடப்பிரிவில் Engineering and Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசில் parent cadre அல்லது துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த அதிகாரிகள் குறைந்தது 4 ஆண்டுகள் Pay Matrix Level 13 அல்லது அதற்கு மேல் உள்ள பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும் என்று தகுதிகள் குறித்து அறிவித்துள்ளது.

UIDAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 02.05.2022 அன்றைய நாளின் படி கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயித்துள்ளது. மேலும் வயது தளர்வு பற்றி அறிவிப்பில் காணலாம்.

Aadhaar ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது Pay Matrix Level 14 என்கிற ஊதிய அளவின் படி, மாதம் ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை ஊதியம் பெற தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

UIDAI தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் INTERVIEW அல்லது தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

Aadhaar விண்ணப்பிக்கும் முறை:

ஆதார் துறை பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப வேண்டும் அல்லது கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!