UGC NET ஜூன் 2020 தேர்வு அறிவிப்பு
பல்கலைக்கழக மானிய குழு (UGC) ஆனது தேசிய தகுதி தேர்வினை (NET) வரும் ஜூன் மாதம் நடத்த உள்ளதாக பொது அறிவிப்பு ஒன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மானிய குழு இந்த தகுதித் தேர்வினை இளநிலை ஆராய்ச்சி பெல்லோவ்ஷிப் மற்றும் உதவி பேராசிரியருக்கான தகுதி ஆகியவற்றிற்காக நடத்த இருக்கிறது.
கணினி சார்ந்த தேர்வாக நடத்தப்படும் இந்த தேர்வு ஆனது வரும் ஜூன் 15 முதல் 20 வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வானது இரண்டு தாள்கள் கொண்டதாக நடைபெறும். இதற்கு பட்டதாரிகள் மற்றும் முதுநிலை தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 16 வரை ஆன்லைன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணங்களை ஏப்ரல் 17 அன்றுக்குள் செலுத்த வேண்டும்.
Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்